பசு சாணத்திலிருந்து பொருட்கள் தயாரித்து அமேசானில் விற்பனை செய்யும் சத்தீஸ்கர் கிராம பெண்கள்

 

பசு சாணத்திலிருந்து பொருட்கள் தயாரித்து அமேசானில் விற்பனை செய்யும் சத்தீஸ்கர் கிராம பெண்கள்

சத்தீஸ்கரில் கிராம பெண்கள் பசு சாணத்திலிருந்து விளக்குகள், வறட்டி உள்ளிட்ட பொருட்களை தயாரித்து அமேசான் போன்ற ஆன்லைன் வர்ததக தளங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.

சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் கால்நடை வளர்ப்பை வர்த்தக ரீதியாக லாபகரமாக்க, கால்நடைகள் திறந்த மேய்ச்சலை தடுக்க, தெருவில் மாடுகள் சுற்றுவதால் ஏற்படும் பிரச்சினை தீர்க்க மற்றும் சுற்றுப்புறச்சூழலை பாதுகாப்பதற்காக கோதன் நியாயே யோஜானா என்ற திட்டத்தை முதல்வர் பூபேஷ் பாகேல் அறிமுகம் செய்து வைத்தார். இந்த திட்டத்தின்படி, விவசாயிகளிடமிருந்து மாட்டு சாணத்தை அரசு விலைக்கு வாங்கி மண்புழு உரம் தயாரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் பயன்படுத்தும், பின் அவற்றை விற்பனை செய்யும்.

பசு சாணத்திலிருந்து பொருட்கள் தயாரித்து அமேசானில் விற்பனை செய்யும் சத்தீஸ்கர் கிராம பெண்கள்
பூபேஷ் பாகல்

தற்போது சத்தீஸ்கரில் ஆயிரக்கணக்கான கிராம பெண்கள் பசு சாணத்திலிருந்து வறட்டி, விளக்குகள் மற்றும் பூ ஜாடிகள் போன்றவற்றை தயாரித்து அமேசான் போன்ற ஆன்லைன் வர்த்தக தளங்களில் விற்பனை செய்து வருவாய் ஈட்டு வருகின்றனர். இது தொடர்பாக ராஜ்நந்த்கான் மாவட்ட கலெக்டர் தரன் பிரகாஷ் சின்ஹா கூறியதாவது: சத்தீஸ்கரின் ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான கிராமப்புற மற்றும் ஏழைப் பெண்கள் பசு சாணத்திலிருந்து பொருட்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பசு சாணத்திலிருந்து பொருட்கள் தயாரித்து அமேசானில் விற்பனை செய்யும் சத்தீஸ்கர் கிராம பெண்கள்
பசு சாணத்தை எடுத்தும் பெண்கள்

தங்களுக்கு தயாரிப்புகளுக்கு மற்ற மாநிலங்களிலிருந்து அதிகரித்து வரும் ஆர்டர்களை தொடர்ந்து, இ-காமர்ஸ் தளங்கள் மூலம் பரந்த சந்தையை அடைவதை உறுதி செய்துள்ளனர். 354 சுயஉதவிக் குழுக்களின் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களால் தயாரிக்கப்பட்ட வறட்டி, விளக்குகள் மற்றும் பூ ஜாடிகள் உள்ளிட்ட பசு சாண தயாரிப்புகள் நிர்வாகத்தின் உதவியுடன் இப்போது ஆன்லைன் வர்த்தக தளங்களில் கிடைக்கின்றன.

பசு சாணத்திலிருந்து பொருட்கள் தயாரித்து அமேசானில் விற்பனை செய்யும் சத்தீஸ்கர் கிராம பெண்கள்
பசு சாணத்தில் தயாரிக்கப்பட்ட விளக்குகள்

சத்தீஸ்கர் மாநிலத்தில் பசு சாணத்திலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்களை ஆன்லைன் தளங்களில் விற்பனை செய்யும் முதல் மாவட்டமாக ராஜ்நந்த்கான் மாறியுள்ளது. இதுவரை, மாவட்டத்தின் பெண்களுக்கு உதவ பசு சாணத்தால் தயாரிக்கப்பட்ட உரம் மற்றும் இதர பொருட்கள் மொத்தம் ரூ.5 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் ஆன்லைன் பசு சாணம் விற்பனை செய்யும் நடவடிக்கை தொடங்கினோம். இதுவரை ரூ.1 லட்சம் மதிப்புள்ள பசு சாண பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. உற்பத்தியை அதிகரிக்க வழிவகுக்கும் சந்தையை விரிவாக்குவதன் மூலம் தயாரிப்பாளர்களின் இலாபத்தை அதிகரிப்பதே இதன் நோக்கம். கடந்த சில நாட்களாக ஆன்லை விற்பனை அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.