அசாமில் 2ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது.. 39 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு

அசாமில் 2ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது.. 39 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு

அசாமில் 2ம் கட்ட தேர்தல் நடைபெற 39 தொகுதிகளில் பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. இந்த தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

அசாமில் 126 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மொத்தம் 3 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த 27ம் தேதி முதல் கட்டமாக 47 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. 2ம் கட்டமாக நாளை 39 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

அசாமில் 2ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது.. 39 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
தேர்தல்

2ம் கட்ட தேர்தல் நடைபெறும் 39 தொகுதிகளில் நேற்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது. இந்த 39 தொகுதிகளில் மொத்தம் 345 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதிகளில் மொத்தம் 73.44 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 37.34 லட்சம் பேரும், பெண்கள் 36.09 லட்சம் பெண்களும் அடங்குவர். மேலும் 135 மூன்றாம் பாலித்தனவரும் அடங்குவர்.

அசாமில் 2ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது.. 39 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா

இந்த தொகுதிகளில் நேற்று பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, அசாம் முதல்வர் சோனோவால், ஹிமாந்தா விஸ்வா சர்மா ஆகியோர் தீவிரமாக பிரசாரம் செய்தனர். 2016ம் ஆண்டில் அசாம் சட்டப்பேரவை தேர்தல் மொத்தம் 2 கட்டங்களாக நடைபெற்றது. ஆனால் இந்த ஆண்டு மொத்தம் 3 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த மாநிலத்தில் 3ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெறும்.