போன மாசம் மட்டும் 12.81 லட்சம் பைக், ஸ்கூட்டர் காலி.. மீண்டும் சூடு பிடிக்க தொடங்கிய வாகன விற்பனை

போன மாசம் மட்டும் 12.81 லட்சம் பைக், ஸ்கூட்டர் காலி.. மீண்டும் சூடு பிடிக்க தொடங்கிய வாகன விற்பனை

லாக்டவுனால் முடங்கி கிடந்த வாகன விற்பனை தற்போது மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் சுத்தமாக வாகன விற்பனை நடக்கவில்லை. மே மாதத்தில் வாகன விற்பனை சிறிது நடைபெற்றது. ஜூன் மாதத்தில் வாகன விற்பனை சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது. கடந்த மாதத்தில் வாகன விற்பனை முந்தைய ஜூன் மாதத்தை காட்டிலும் அதிகரித்துள்ளபோதிலும், முந்தைய ஆண்டுடன் ஒப்பிட்டால் விற்பனை குறைவுதான்.

போன மாசம் மட்டும் 12.81 லட்சம் பைக், ஸ்கூட்டர் காலி.. மீண்டும் சூடு பிடிக்க தொடங்கிய வாகன விற்பனை

இந்திய வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2020 ஜூலை மாதத்தில் நம் நாட்டில் மொத்தம் 12.81 லட்சம் பைக், ஸ்கூட்டர் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகி உள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் 15.24 சதவீதம் குறைவாகும். 2019 ஜூலை மாதத்தில் மொத்தம் 15.11 லட்சம் இருசக்கர வாகனங்கள் விற்பனையாகி இருந்தது. 2020 ஜூலை மாதத்தில் 8.88 லட்சம் மோட்டார் சைக்கிகளும், 3.34 லட்சம் ஸ்கூட்டர்களும் விற்பனையாகி உள்ளது.

போன மாசம் மட்டும் 12.81 லட்சம் பைக், ஸ்கூட்டர் காலி.. மீண்டும் சூடு பிடிக்க தொடங்கிய வாகன விற்பனை

கடந்த மாதம் உள்நாட்டில் 1.82 லட்சம் பயணிகள் வாகனங்கள் விற்பனையாகி இருந்தது. இது 2019 ஜூலை மாதத்தை காட்டிலும் 3.86 சதவீதம் குறைவாகும். இருப்பினும், பயணிகள் வாகன விற்பனை கிட்டத்தட்ட பழைய நிலைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2019 ஜூலை மாதத்தில் 1.90 லட்சம் பயணிகள் வாகனங்கள் விற்பனையாகி இருந்தது.