அர்ஜுன மூர்த்திக்கு ரஜினி வழங்கிய சிறப்பு அதிகாரம்: என்ன தெரியுமா?

 

அர்ஜுன மூர்த்திக்கு ரஜினி வழங்கிய சிறப்பு அதிகாரம்: என்ன தெரியுமா?

ஜனவரி மாதம் தொடங்கவிருக்கும் ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் அர்ஜுன மூர்த்திக்கு, ரஜினிகாந்த் சிறப்பு அதிகாரங்கள் வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகிறது.

அர்ஜுன மூர்த்திக்கு ரஜினி வழங்கிய சிறப்பு அதிகாரம்: என்ன தெரியுமா?

2017ம் ஆண்டில் இருந்து ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என எழுந்து வந்த கேள்விக்கு பதில் தெரிந்து விட்டது. ஜனவரி மாதம் கட்சி தொடங்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார் ரஜினி. மேலும், தனது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியையும் கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் நியமித்திருப்பதாக அறிவித்தார். பாஜகவில் இருந்து அர்ஜுன மூர்த்தி தற்போது ரஜினிகாந்த் கட்சியில் இணைந்ததால், பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.

அர்ஜுன மூர்த்திக்கு ரஜினி வழங்கிய சிறப்பு அதிகாரம்: என்ன தெரியுமா?

இந்த நிலையில், அர்ஜுன மூர்த்திக்கு புதிதாக மாவட்டங்களை உருவாக்குதல் குறித்த பல்வேறு அதிகாரங்களை ரஜினி வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகிறது. அதாவது, 38 மாவட்டங்களை 60 மாவட்டங்களாக பிரிக்கும் அதிகாரத்தை அர்ஜுன மூர்த்திக்கும், ரஜினி மக்கள் மன்றத்தை விரிவாக்கம் செய்யும் போது ஏற்படும் மனஸ்தாபம் மற்றும் பிரச்னைகளை கையாளும் அதிகாரத்தை தமிழருவி மணியனுக்கும் ரஜினி வழங்கியிருப்பதாக தெரிகிறது.

மேலும், இது போன்ற பணிகளை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் இதுவரை செய்து வந்த நிலையில், இனிமேல் ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்து ரஜினிக்கு தெரியப்படுத்திய பின்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இருவரிடமும் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.