‘அதிமுக முதல்வர் வேட்பாளர்’ அக்.7 ஆம் தேதி வெளியாகிறது முக்கிய அறிவிப்பு!

 

‘அதிமுக முதல்வர் வேட்பாளர்’ அக்.7 ஆம் தேதி வெளியாகிறது முக்கிய அறிவிப்பு!

வரும் அக்.7 ஆம் தேதி முதல்வர் வேட்பாளர் பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாகும் என கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

பல்வேறு பரபரப்பான சூழலுக்கு இடையே இன்று காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக தலைமை கழகத்தில் செயற்குழு கூட்டம் தொடங்கியது. கட்சியின் வளர்ச்சி பணி, தேர்தல் கூட்டணி, அடுத்த முதல்வர் வேட்பாளர் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படியே கூட்டத்தின் தொடக்கத்தில் 15 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதில் பெரும்பாலானாவை முதல்வர் பழனிசாமிக்கு நன்றி தெரிவிப்பதாகவே இருந்தது.

‘அதிமுக முதல்வர் வேட்பாளர்’ அக்.7 ஆம் தேதி வெளியாகிறது முக்கிய அறிவிப்பு!

அதனைத்தொடர்ந்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முதல்வர் வேட்பாளர் தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே காரசாரமான விவாதம் எழுந்ததால் கூட்டம் 5 மணி நேரம் நீட்டித்ததாக தெரிகிறது. அப்போது, 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்க வேண்டும் என ஓபிஎஸ் ஆதரவாளர்களும், குழுவுக்கு பதிலாக கட்சியை நிர்வகிக்க குழு அமைக்கலாம் என ஈபிஎஸ் ஆதரவாளர்களும் தெரிவித்தார்களாம். பின்னர் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டம் நிறைவடைந்தது.

‘அதிமுக முதல்வர் வேட்பாளர்’ அக்.7 ஆம் தேதி வெளியாகிறது முக்கிய அறிவிப்பு!

கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, வரும் அக்டோபர் 7ம் தேதி அடுத்த முதல்வர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்தார். பெரும்பாலும் எடப்பாடி பழனிசாமியே அடுத்த முதல்வராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.