உடற்தகுதி தேர்வில் போலி சான்றிதழ் அளித்து ஆள்மாறாட்டம்… தருமபுரியில் இளைஞர் கைது!

 

உடற்தகுதி தேர்வில் போலி சான்றிதழ் அளித்து ஆள்மாறாட்டம்… தருமபுரியில் இளைஞர் கைது!

தருமபுரி

தருமபுரியில் நடந்து வரும் காவலர் உடற்தகுதி தேர்வில் போலி சான்றிதழ் கொடுத்து ஆள்மாறாட்டம் செய்ய முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலர், சிறைக் காவலர், தீயணைப்பாளர் உள்ளிட்ட 10,906 காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்தர்வு கடந்த டிசம்பர் 13ஆம் தேதி நடந்தது. 4.91 லட்சம் பேர் பங்கேற்ற இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணி தமிழகம் முழுவதும் 20 இடங்களில் நடைபெற்று வருகிறது.

உடற்தகுதி தேர்வில் போலி சான்றிதழ் அளித்து ஆள்மாறாட்டம்… தருமபுரியில் இளைஞர் கைது!

இதன்படி, தருமபுரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த காவல் தேர்வர்களுக்கு, உடற்தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த உடல் தகுதி தேர்வில் தருமபுரி மாவட்டம் சின்ன முருக்கம்பட்டியை சேர்ந்த சசிக்குமார் என்பவர் பங்கேற்றார். சான்றிதழ்களை பரிசோதனை செய்ததில், அவர் போலி சான்றிதழ் வழங்கி ஆள்மாறாட்டம் செய்ய முயன்றது தெரிய வந்தது.

தொடர்ந்து, அவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், காரிமங்கலத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவரும், சசிகுமாரும் தனியார் பயிற்சி மையத்தில் பயின்று வந்ததும், எழுத்து தேர்வில் தோல்வியடைந்த சசிகுமார், வெற்றிபெற்ற பிரகாஷின் சான்றிதழில் புகைப்படத்தை மாற்றி உடற்தகுதி தேர்வில் பங்கேற்றது தெரிய வந்தது. இதனையடுத்து, சசிகுமாரை போலீசார் கைது செய்தனர்.