எடப்பாடி தொகுதியில் முதல்வரை எதிர்த்து போட்டியிடும் இமான் அண்ணாச்சி!

 

எடப்பாடி தொகுதியில் முதல்வரை எதிர்த்து போட்டியிடும் இமான் அண்ணாச்சி!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக -அதிமுக கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். அதேபோல் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, தாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் விருப்ப மனுவை விநியோகம் செய்ய தொடங்கியுள்ளன. விருப்ப மனுக்களை பெற்று அந்தந்த கட்சி தொண்டர்கள் மிகவும் ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை தாக்கல் செய்து வந்தனர். அந்த வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மீண்டும் எடப்பாடி தொகுதியில் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது

எடப்பாடி தொகுதியில் முதல்வரை எதிர்த்து போட்டியிடும் இமான் அண்ணாச்சி!

இந்நிலையில் எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமியை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட பிரபல நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் முதல்வர் பழனிசாமியை எதிர்த்து போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியவில்லை.