வசமாக சிக்கிய பாபா ராம்தேவ்… ரூ.1,000 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ்!

 

வசமாக சிக்கிய பாபா ராம்தேவ்… ரூ.1,000 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ்!

பாரம்பரிய மருத்துவத்தையும் யோகாவையும் முன்னிறுத்தி அறிவியல் சார்ந்த அலோபதி மருத்துவத்தைத் தொடர்ச்சியாக இழிவுப்படுத்தி வருகிறார் பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “அலோபதி மருத்துவம் என்பது முட்டாள்தனமான அறிவியல். லட்சக்கணக்கான மக்கள் அலோபதி மருத்துவத்தால்தான் உயிரிழக்கிறார்கள். ரெம்டெசிவிர், ஃபேபிஃப்ளூ உள்ளிட்ட மற்ற மருந்துகள் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டாலும் கொரோனாவை குணப்படுத்தவில்லை” என பல்வேறு ஆதாரமற்ற அவதூறுகளைச் சுமத்திக் கொண்டிருந்தார்.

வசமாக சிக்கிய பாபா ராம்தேவ்… ரூ.1,000 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ்!

அவரின் இப்பேச்சுக்கு இந்திய மருத்துவ கூட்டமைப்பு (ஐஎம்ஏ) வன்மையான கண்டனத்தைத் தெரிவித்திருந்தது. பாபா ராம்தேவ் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கோரவும் ஐஎம்ஏ நோட்டீஸ் அனுப்பியது. எந்த முழுமையான தகவலும் தெரியாமல் மக்களைத் தவறாக வழிநடத்தும் பாபாவை கைது செய்ய வேண்டும் எனவும் கூறியிருந்தது. இதுதொடர்பாக பாபா ராம்தேவ் தரப்பில், பாபா ராம்தேவ் தனக்கு வாட்ஸ்அப்பில் வந்த தகவலைத் தான் அந்நிகழ்ச்சியில் பேசியதாகவும், அது வைரலாகும் என தெரியவில்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

வசமாக சிக்கிய பாபா ராம்தேவ்… ரூ.1,000 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ்!

இந்த விவகாரத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தலையிட்டு கருத்தை வாபஸ் பெறுமாறு பாபா ராம்தேவிடம் கேட்டுக்கொண்டார். அதற்குப் பிறகு தனது கருத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக பாபா ராம்தேவ் பகீரங்கமாக தெரிவித்தார். சரி இதோடு முடிந்துவிட்டது என்று நினைத்தால் ராம்தேவ் மீண்டும் பிரச்சினையைக் கிளப்பினர். அலோபதி மருத்துவம் குறித்து 25 கேள்விகளை இந்திய மருத்துவ கூட்டமைப்பிடம் முன்வைத்தார்.

வசமாக சிக்கிய பாபா ராம்தேவ்… ரூ.1,000 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ்!

உயர் ரத்த அழுத்தம், முதல் வகை மற்றும் 2-வது வகை நீரிழிவுக்கு அலோபதி நிரந்தர நிவாரணம் அளிக்குமா? தைராய்டு, கீழ்வாதம், பெருங்குடல் அழற்சி மற்றும் ஆஸ்துமாவுக்கு மருந்தியியல் துறையில் நிரந்தர சிகிச்சை உள்ளதா? காச நோய் மற்றும் சின்னம்மைக்கு நீங்கள் சிகிச்சை கண்டறிந்தது போல் கல்லீரல் பாதிப்புகளுக்கு சிகிச்சை கண்டறியுங்கள் என 25 கேள்விகளைக் கேட்டிருந்தார். இதையடுத்து தற்போது இந்திய மருத்துவ கூட்டமைப்பின் உத்தரகாண்ட் மாநில கிளை பாபா ராம்தேவ் கடுமையாக விமர்சித்திருக்கிறது. அதேபோல இன்னும் 15 நாட்களில் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அதற்குப் பதிலாக ஆயிரம் கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.