“வாடகை கொடுக்காமல் உள்ளே செல்ல கூடாது”: சாவியை பறித்த உரிமையாளர் ; தற்கொலை செய்துகொள்ளும் நிலைமைக்கு தள்ளப்பட்ட குடும்பம்!

“வாடகை கொடுக்காமல் உள்ளே செல்ல கூடாது”: சாவியை பறித்த உரிமையாளர் ; தற்கொலை செய்துகொள்ளும் நிலைமைக்கு தள்ளப்பட்ட குடும்பம்!

கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை சிவசக்தி நகர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ். இவருக்கு லோகேஸ்வரி என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர். இவர் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் தங்களது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் கடந்த 16ஆம் தேதி குடும்பத்துடன் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

அப்போது அவர்களை வழிமறித்த வீட்டின் உரிமையாளர் வாடகை தந்தால் மட்டுமே வீட்டிற்குள் வர வேண்டும் இல்லையேல் வீட்டை காலி செய்து கொள்ளுங்கள் என்று கூறி சாவியை பறித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த தம்பதி கடந்த ஒரு வார காலமாக தனது உறவினர் வீட்டில் தங்கிக்கொண்டு அம்மா உணவகத்தில் உணவு உண்டு பொழுதை கழித்து வருகின்றனர்.

“வாடகை கொடுக்காமல் உள்ளே செல்ல கூடாது”: சாவியை பறித்த உரிமையாளர் ; தற்கொலை செய்துகொள்ளும் நிலைமைக்கு தள்ளப்பட்ட குடும்பம்!

இதுகுறித்து தர்மராஜ் – லோகேஸ்வரி தம்பதி தனது குழந்தைகளுடன் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்துள்ளார். அதில் எங்களுக்கு வாடகை செலுத்தி இரண்டு மாதம் அவகாசம் வழங்கி சாவியை மீட்டு தரவேண்டும் என்றும் இல்லை என்றால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை என்றும் அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

“வாடகை கொடுக்காமல் உள்ளே செல்ல கூடாது”: சாவியை பறித்த உரிமையாளர் ; தற்கொலை செய்துகொள்ளும் நிலைமைக்கு தள்ளப்பட்ட குடும்பம்!

கொரோனா பரவல் காரணமாக பலரும் தங்கள் சொந்த ஊருக்கு கிளம்பி விட்ட நிலையில் மீண்டும் வாடகை வீட்டிற்கு திரும்பும் போது அதன் உரிமையாளர்கள் நீங்கள் கொடுத்த அட்வான்ஸ் பணம் மொத்தமும் கழிந்து விட்டது. அதனால் இனிமேல் நீங்கள் வாடகை கொடுத்தால்தான் உங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று கூறி அவர்களை வீட்டிற்குள் அனுமதிக்க மறுக்கின்றனர். இதனால் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் மக்கள் பலர் என்ன செய்வது என்று தெரியாது துயரத்தில் தவிக்கின்றனர். இது தொடர்பாக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.