இளையராஜா இசை அஞ்சலி- வைரலாகும் வீடியோ யாருடையது ?

 

இளையராஜா இசை அஞ்சலி- வைரலாகும் வீடியோ யாருடையது ?

இளையராஜா உருக்கமாக வெளியிட்ட எங்க போயிட்ட பாலு வீடியோவுக்கு பின்னர், எஸ்.பி.பிக்காக இளையராஜாவின் இசையஞ்சலி என்கிற பாடல் சமூக வலைதளங்களில் வெளியானது. இளையராஜா குரலில் பாடியதாக அந்த வீடியோ வைரலாகி வருகிறது. சில செய்தி சேனல்களும் எஸ்.பி.பியின் இறுதி அஞ்சலிக்காக இளையராஜா பாடிய பாடல் என்று கூறி அந்த பாடலை வெளியிட்டன.

இளையராஜா இசை அஞ்சலி- வைரலாகும் வீடியோ யாருடையது ?

ஆனால் அந்த பாடல் இளையராஜா பாடவில்லையாம். அவர் இசையமைக்கவும் இல்லை. அந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் விஸ்வமாலிக் என்பவர். கரண்ராஜ் என்பவர் பாடியுள்ளார். இளையராஜா குரலில் கரண்ராஜ் பாடிய பாடல்தான் தற்போது வைரலாகி வருகிறது. எனினும் நண்பர் எஸ்.பி.பிக்கான இளையராஜா செலுத்தும் இசையஞ்சலி என அவரது குரல்போலவே கேட்டபோது ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

இளையராஜா இசை அஞ்சலி- வைரலாகும் வீடியோ யாருடையது ?

எஸ்பிபி – இளையராஜா கூட்டணியில் பல சாகா வரம்பெற்ற பாடல்கள் கிடைத்ததைப் போல, எஸ்.பி.பி ரஹ்மான் கூட்டணியிலும் பல சாகாவரம்பெற்ற பாடல்கள் கிடைத்துள்ளன.