“எந்த அரசியல் கட்சியும் வேறு ஒரு அரசியல் கட்சியின் விவகாரத்தில் தலையிடுவது இல்லை… பாஜகவும் அப்படிதான்”

 

“எந்த அரசியல் கட்சியும் வேறு ஒரு அரசியல் கட்சியின் விவகாரத்தில் தலையிடுவது இல்லை… பாஜகவும் அப்படிதான்”

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பற்றிய பேச்சு எழுந்தவுடனே அதிமுகவின் முதல்வர் வேட்பளார் யார் என்ற சர்ச்சை எழுந்தது. இதற்கு ஒரு முற்றிப்புள்ளி வைப்பதற்காக, நேற்று சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக தலைமை கழகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் எல்லாரும் இருந்த நிலையிலும், முதல்வர் வேட்பாளர் பிரச்னைக்கு தீர்வு எட்டப்படவில்லை.

அதுமட்டுமில்லாமல், முதல்வர் வேட்பாளர் தொடர்பாக துணை முதல்வர் ஓபிஎஸ்க்கும் முதல்வர் பழனிசாமிக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்த சர்ச்சை தொடர்ந்து நீடித்ததால் வரும் 7ம் தேதி முதல்வர் வேட்பாளர் யார் என முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் ஓபிஎஸ்சும் இணைந்து அறிவிப்பார்கள் என கே.பி முனுசாமி அறிவித்தார். இது பெரும் எதிர்பார்ப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதனிடையே டிடிவி தினகரன் டெல்லிக்கு சென்று குழப்பத்தை ஏற்படுத்தியதே இத்தனை பிரச்னைக்கு காரணம் என்றும் பாஜக அதிமுகவுக்கு இடையில் புகுந்து விளையாடி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

“எந்த அரசியல் கட்சியும் வேறு ஒரு அரசியல் கட்சியின் விவகாரத்தில் தலையிடுவது இல்லை… பாஜகவும் அப்படிதான்”

இந்நிலையில் அதிமுக பிளவு குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் இல கணேசன், “அதிமுக தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்றால் அவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமையை மக்கள் மத்தியில் நிரூபிக்க வேண்டும். ஒற்றுமை தான் அவர்களுக்கு பலம். ஏழாம் தேதி வரை நாம் பொறுத்திருப்போம். அதிகாரப்பூர்வமாக எந்த அரசியல் கட்சியும் வேறு ஒரு அரசியல் கட்சியின் விவகாரத்தில் தலையிடுவது இல்லை. பாஜகவும் அதைச் செய்யாது” எனக் கூறினார்.