அதிகப்படியான சர்க்கரை எப்படி கல்லீரல் நோயை ஏற்படுத்துகிறது? – ஐஐடி-யின் புது கண்டுபிடிப்பு

 

அதிகப்படியான சர்க்கரை எப்படி கல்லீரல் நோயை ஏற்படுத்துகிறது? – ஐஐடி-யின் புது கண்டுபிடிப்பு

நம்முடைய உடலின் மிகப்பெரிய ரசாயன தொழிற்சாலை கல்லீரல். அங்கு ஆயிரக் கணக்கான பணிகள் நடைபெறுகின்றன. புரதம் உள்ளிட்டவற்றை உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தாக மாற்றுவது, நச்சுக்களை நீர்த்துப்போகச் செய்வது, செரிமானத்துக்கு உதவுவது என்று பல பணிகள் நடக்கின்றன.

அதிகப்படியான சர்க்கரை எப்படி கல்லீரல் நோயை ஏற்படுத்துகிறது? – ஐஐடி-யின் புது கண்டுபிடிப்பு

பொதுவாக மது அருந்துபவர்களுக்கு கல்லீரல் செயலிழப்பு போன்ற பிரச்னைகள் அதிகம் ஏற்படும். ஆனால், தற்போது வாழ்வியல் மாறுதல் காரணமாக ஆல்கஹால் அருந்தாதவர்களுக்கு கூட அதிக அளவில் கல்லீரல் செயலிழப்பு ஏற்படுகிறது. இதற்குக் காரணம் நாம் எடுத்துக்கொள்ளும் அதிகப்படியான கார்போஹைட்ரேட் (சர்க்கரை) உள்ள உணவுகள்தான். இந்த கார்போஹைட்ரேட்டை கல்லீரல் கொழுப்பாக மாற்று சேமித்து வைக்கிறது. கொழுப்பு அளவு அதிகரிப்பது கல்லீரல் செயலிழப்புக்கு வழிவகுக்கிறது.

இந்த நிலையில் அதிகப்படியான சர்க்கரை அளவு எப்படி கல்லீரல் நோய்களை ஏற்படுத்துகிறது என்று மாண்டி ஐஐடி ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இது தொடர்பான கண்டுபிடிப்புகளை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

தேசிய புற்றுநோய் தடுப்பு மற்றும் தவிர்ப்பு அமைப்பு உள்ளிட்ட பல்வேறு சுகாதார அமைப்புகளுடன் இணைந்து சென்னை ஐஐடி இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. ஆய்வு முடிவானது ஜேர்னல் ஆஃப் பயலாஜிக்கல் கெமிஸ்டிரி இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆல்கஹால் அல்லாத கல்லீரல் கொழுப்பு நோய் (NAFLD) ஏற்படுவதற்கான காரணங்கள் பற்றிய ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

அதில், “கல்லீரலில் கொழுப்பு அதிகரிப்பதற்கு நாம் எடுத்துக்கொள்ளும் அதிகப்படியான சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் உணவுகள் காரணம். நாம் எடுத்துக்கொள்ளும் அதிகப்படியான சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டை நம்முடைய கல்லீரல் கொழுப்பாக மாற்றி, கல்லீரலில் சேமித்து வைக்கிறது” என்று சென்னை ஐஐடி அடிப்படை அறிவியல் துறை உதவி பேராசிரியர் பிரோசென்ஜித் மண்டல் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “இந்தியாவில் பரவலாக 9 முதல் 32 சதவிகிதம் அளவுக்கு ஆல்கஹால் அல்லாத கல்லீரல் கொழுப்பு நோய் உள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 49 சதவிகிதம் அளவுக்கு நோய் பரவலாக உள்ளது. அதிலும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மத்தியில் அதிக அளவில் இந்த பதிப்பு காணப்படுகிறது.

சர்க்கரை மற்றும் அதிக கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளைத் தவிர்ப்பதன் மூலம் ஆல்கஹால் அல்லாத ஃபேட்டி லிவர் பிரச்னைக்கான வாய்ப்பைக் குறைக்கலாம். உணவில் சர்க்கரையுடன் பாலீஷ் செய்யப்பட்ட அரிசி உள்ளிட்ட உணவுகளைக் குறைப்பதன் மூலம் இதை சாத்தியப்படுத்தலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.