20 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை முடிவுகள் : அசத்தும் ஐஐடி ஹைதராபாத்!

 

20 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை முடிவுகள் : அசத்தும் ஐஐடி ஹைதராபாத்!

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூன் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 3,43,091 லிருந்து 3,54,065 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,86,935 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,903 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

20 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை முடிவுகள் : அசத்தும் ஐஐடி ஹைதராபாத்!

கொரோனா பாதிப்பு பரிசோதனை முடிவுகள் தற்போது ஆர்டிபிசிஆர் பரிசோதனை மூலம் மேற்கொள்ளப் படுகிறது. இந்த பரிசோதனை குறைந்த அளவிலான முறையில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த முடிவுகள் வெளியிடுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா போன்ற நாட்டில் கொரோனா பரிசோதனை என்பது சவாலான ஒன்றாக மாறியுள்ளது.

20 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை முடிவுகள் : அசத்தும் ஐஐடி ஹைதராபாத்!

இந்நிலையில் ஹைதராபாத் ஐஐடி கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் கோவிந்த் சிங், பேராசிரியர் சுரியத்சனா திரிபாதி, நான்காமாண்டு மாணவி சுப்ரஜா ஆகியோர் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட கொரோனா பரிசோதனைக் கருவியை வடிவமைத்துள்ளனர். இந்த பரிசோதனை கருவியானது அதன் முடிவுகளை 20 நிமிடங்களுக்குள் வெளியிடும் திறன் கொண்டதாம். தற்போதைய சூழ்நிலையில் இந்த பரிசோதனையை மேற்கொள்ள ரூபாய் 600 செலவாகும் எனவும் அதிக அளவிலான உற்பத்தி செய்யப்படும் போது இதன் விலை 350 குறையும் எனவும் பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இதை உற்பத்தி செய்ய ஐ சி எம் ஆர் அமைப்பிடம் ஒப்புதல் கேட்டுள்ளதாகவும் ஐஐடி ஹைதராபாத் தெரிவித்துள்ளது.