ரயில் நிலையங்களில் மாஸ்க் அணியாவிடில் ரூ. 200 அபராதம்

 

ரயில் நிலையங்களில் மாஸ்க் அணியாவிடில் ரூ. 200 அபராதம்

கடந்த 5 மாதமாக முடங்கி கிடந்த மக்களை கட்டவிழுத்து விடும் வகையில் செப்.1 ஆம் தேதி முதல் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டன. கொரோனா பாதிப்புகள் குறையாத சூழலில் அரசின் வழிமுறைகளை மக்கள் கடைபிடிப்பார்களா? கொரோனா கட்டுக்குள் வருமா? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. இந்நிலையில் கொரோனா விதிமுறைகளான பொது இடங்களில் தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்டவற்றை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில் பொது சுகாதார சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் கொண்டுவந்தது. அதன்படி பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்றும், பொது இடங்களில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்தால், எச்சில் துப்புதல் உள்ளிட்ட கொரோனா தனிமைப்படுத்துதல் விதிமுறைகளை மீறினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ரயில் நிலையங்களில் மாஸ்க் அணியாவிடில் ரூ. 200 அபராதம்

இந்நிலையில் தற்போது ரயில் நிலையங்களில் மாஸ்க் அணியாவிடில் ரூ. 200 அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் கட்டாய மாஸ்க் அணிய மத்திய அரசு அறிவுறுத்தி உள்ள நிலையில், தற்போது தெற்கு ரயில்வே அபராதம் விதிக்கும் முறையை அறிமுகம் செய்துள்ளது.