“பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால், சென்னையில் தொடர் காத்திருப்பு போராட்டம்”- விவசாய சங்கங்கள் அறிவிப்பு

“பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால், சென்னையில் தொடர் காத்திருப்பு போராட்டம்”- விவசாய சங்கங்கள் அறிவிப்பு

தஞ்சாவூர்

டெல்லியில் மத்திய அரசுடன் இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் அடுத்தக்கட்டமாக, சென்னையில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

“பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால், சென்னையில் தொடர் காத்திருப்பு போராட்டம்”- விவசாய சங்கங்கள் அறிவிப்பு

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் தஞ்சையில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. தஞ்சை திலகர் திடலில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு விவசாய அமைப்புகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இதில் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள், மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத் திருத்தத்தால் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மற்றும் ரேசன் கடைகள் மூடப்படும் அபாயம் உள்ளதாக எச்சரித்தனர்.

“பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால், சென்னையில் தொடர் காத்திருப்பு போராட்டம்”- விவசாய சங்கங்கள் அறிவிப்பு

மேலும், மின்சார திருத்த சட்டத்தால் விவசாயிகளின் இலவச மின்சாரம் பறிக்கப்படும் அபாயம் உள்ளதாக குறிபிட்ட அவர்கள், எனவே மத்திய அரசு விவசாய சட்டங்கள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர். டெல்லியில் இன்று மத்திய அரசுடன் நடைபெறும் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால், அடுத்தக்கட்டமாக டெல்லியில் நடைபெறுவதை போல சென்னையில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்றும், தமிழக அரசு தடுத்து நிறுத்தினால் தடையை மீறி போராட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தனர்.