“சசிகலா வெளியே வந்தால் அதிமுக 4 ஆக உடையும்”

 

“சசிகலா வெளியே வந்தால் அதிமுக 4 ஆக உடையும்”

சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா இம்மாதம் 27 ஆம் தேதி விடுதலை செய்யப்படுகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியையும், ஆட்சியையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர நினைத்த சசிகலா அப்போது முதல்வராக இருந்த ஓ. பன்னீர்செல்வத்தை ராஜினாமா செய்ய வைத்து, பின் தான் முதல்வராக பொறுப்பேற்க தயாராக இருந்தார். ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பு வந்த நிலையில் அவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

“சசிகலா வெளியே வந்தால் அதிமுக 4 ஆக உடையும்”

இதனால் சசிகலாவின் முதல்வர் கனவு சுக்குநூறாக உடைந்தது. இதை தொடர்ந்து சசிகலா உள்பட மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் கடந்த 2017ஆம் ஆண்டு அடைக்கப்பட்டனர். தற்போது சிறை தண்டனை முடிந்து சசிகலா ஜனவரி 27ஆம் தேதி வெளி வருவார் என்று அவரது வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலாவின் வருகை அதிமுகவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று அதிமுக அமைச்சர்கள் கூறிவரும் நிலையில் அதற்கு எதிர்மாறான கருத்தை தெரிவித்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.

“சசிகலா வெளியே வந்தால் அதிமுக 4 ஆக உடையும்”

இந்நிலையில் சசிகலா விடுதலை குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், “சசிகலா வெளியே வந்தால் அமமுக உயிர்த்தெழும் என்கிறார்கள்; அதிமுகவும் 4 ஆக உடைய வாய்ப்பு உள்ளது. 3 வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு என்ன நன்மை என்று முதல்வர் என்னுடன் விவாதிக்க தயாரா? தமிழகத்தில் திமுக- காங்கிரஸ் கூட்டணி இருக்கும் வரை பாஜக முளைக்காது; முளைக்கவும் விடமாட்டோம்” என்று கூறியுள்ளார்.