’இவர் வென்றால் அமெரிக்காவுக்கே அவமானம்’ – அதிபர் டிரம்ப் சொல்வது யாரை?

 

’இவர் வென்றால் அமெரிக்காவுக்கே அவமானம்’ – அதிபர் டிரம்ப் சொல்வது யாரை?

அமெரிக்க தேர்தல் நாள் நெருங்க நெருங்க பிரச்சாரத்தின் சூடும் அதிகரித்து வருகிறது. தற்போது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேசியது பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.

நவம்பர் மாதம் 3-ம் தேதியன்று அமெரிக்காவில் தேர்தல் நடக்கவிருக்கிறது.  குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் குதிக்கிறார்.  ஜனநாயக் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் ஜோ பிடன். துணை அதிபராக ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட  இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரீஸைத் தேர்வு செய்யப்படிருக்கிறார். 

’இவர் வென்றால் அமெரிக்காவுக்கே அவமானம்’ – அதிபர் டிரம்ப் சொல்வது யாரை?

அமெரிக்கத் தேர்தலில் டிரம்பின் கொரோனா கால நடவடிக்கைகள் முக்கியமான பேசுபொருளாக மாறிவிட்ட்டன. இவ்வளவு அலட்சியமாக பெருந்தொற்று நோயைக் கையாளலாமா? என்று டிரம்புக்கு எதிரான குரல்கள் ஒலிக்கின்றன. அதற்காக தேர்தலுக்கு ஓரிரு நாள் முன்பாவது கொரோனா தடுப்பூசியைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார் டிரம்ப்.

’இவர் வென்றால் அமெரிக்காவுக்கே அவமானம்’ – அதிபர் டிரம்ப் சொல்வது யாரை?

இந்நிலையில் தடுப்பூசி பற்றி டிரம்ப் பேசுவதில் நம்பகத்தன்மை இல்லை என்று துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரீஸ் தெரிவித்திருந்தார்.

தற்போது ஒரு நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ‘அமெரிக்க அதிபர் போட்டியிலிருந்து வெளியேறியவர் இந்த கமலா ஹாரீஸ். இவர் மீண்டும் துணை அதிபர் வேட்பாளராக முன்னிருத்தப்படுவது வேடிக்கையானது. இவரை மக்கள் விரும்ப வில்லை. இவர் தேர்தலில் வென்று துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அது அமெரிக்காவுக்கே அவமானம்’ என்று பேசியுள்ளார்.