எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டால், என் அரசியல் வாழ்வு அஸ்தமித்துவிடும்! – புலம்பும் சச்சின் பைலட்

எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டால், என் அரசியல் வாழ்வு அஸ்தமித்துவிடும்! – புலம்பும் சச்சின் பைலட்

அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் என் அரசியல் எதிர்காலம் அஸ்தமித்துவிடும் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சச்சின் பைலட் புலம்பிவருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டால், என் அரசியல் வாழ்வு அஸ்தமித்துவிடும்! – புலம்பும் சச்சின் பைலட்
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் சிலர் போர்க்கொடி உயர்த்தினர். இதைத் தொடர்ந்து மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தும், துணை முதல்வர் பொறுப்பிலிருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டார்.

எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டால், என் அரசியல் வாழ்வு அஸ்தமித்துவிடும்! – புலம்பும் சச்சின் பைலட்
காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு வராதது ஏன் என்ற விளக்கம் கேட்கப்பட்டது. மேலும், ராஜஸ்தான் சபாநாயகர் இவர்களை தகுதிநீக்கம் செய்வது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதை எதிர்த்து சச்சின் பைலட் தரப்பு எம்.எல்.ஏ-க்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டால், என் அரசியல் வாழ்வு அஸ்தமித்துவிடும்! – புலம்பும் சச்சின் பைலட்இது குறித்து அவர் அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம், நீதிமன்றம் தனக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் காங்கிரஸ் கட்சிக்குள் இருதே என்னுடைய போராட்டத்தை தொடர்வேன். ஒருவேளை தகுதிநீக்கம் செய்வதற்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால் என்னுடைய அரசியல் எதிர்காலம் அஸ்தமித்துவிடும். காங்கிரஸை வீழ்த்த விரும்பவில்லை, அசோக் கெலாட் தலைமையை எதிர்த்தே போராடுகிறேன். அசோக் கெலாட் எனக்கு எதிராக செயல்பட்டால், அடக்குமுறைகளைக் கையாண்டார். ஆனால் இவை பற்றி காங்கிரஸ் தலைமை கண்டுகொள்ளவே இல்லை. என்று கூறியுள்ளாராம்.