”பெருநிறுவனங்கள் வங்கி தொடங்கினால், ஆர்பிஐ கண்காணிக்க வேண்டும்” – கே.வி.காமத் வலியுறுத்தல் !

”பெருநிறுவனங்கள் வங்கி தொடங்கினால், ஆர்பிஐ கண்காணிக்க வேண்டும்” – கே.வி.காமத் வலியுறுத்தல் !

இந்தியாவில் பெரு நிறுவனங்களை வங்கித் துறையில் இறங்குவது வரவேற்கத்தக்கது என வங்கித் துறையில் முக்கிய தலைவரான கே.வி.காமத் கூறியுள்ளார். அதேநேரத்தில், கார்பரேட் வங்கிகளை ரிசர்வ் வங்கி தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

”பெருநிறுவனங்கள் வங்கி தொடங்கினால், ஆர்பிஐ கண்காணிக்க வேண்டும்” – கே.வி.காமத் வலியுறுத்தல் !

கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக தொழில்துறை மற்றும் நிதிச் சேவைத் துறைகள் முடங்கிய நிலையில், அவற்றை சீரமைப்பதற்கான ரிசவ் வங்கி சார்பில், காமத் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. உருக்கு, உள்கட்டமைப்பு, மொத்த விற்பனை, ஏற்றுமதி, ஜவுளி, ரியல் எஸ்டேட் மற்றும் விமானத் துறை உள்ளிட்ட 26 முக்கிய துறைகளில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து ஆலோசனை அளிக்க இந்த குழு அமைக்கப்பட்டது. இந்த குழு சமீபத்தில் அளித்த பரிந்துரைகளில், வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் பெருநிறுவனங்கள் வங்கி தொடங்குவதற்கு அனுமதி அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த பரிந்துரை பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

”பெருநிறுவனங்கள் வங்கி தொடங்கினால், ஆர்பிஐ கண்காணிக்க வேண்டும்” – கே.வி.காமத் வலியுறுத்தல் !

ரிசர்வ் வங்கியின் முன்னால் கவர்னர் ரகுராம் ராஜன், முன்னால் துணை கவர்னர் விரால் ஆச்சார்யா ஆகியோர் இந்த பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காமத், கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த துணிகர முடிவினை எடுக்க அனுமதிக்க வேண்டும் என்றும், அவர்களை கண்காணிக்கும் பொறுப்பினை ரிசர்வ் வங்கி எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

”பெருநிறுவனங்கள் வங்கி தொடங்கினால், ஆர்பிஐ கண்காணிக்க வேண்டும்” – கே.வி.காமத் வலியுறுத்தல் !

கோட்டக் மஹிந்திரா, யெஸ் வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, யுடிஐ வங்கி, இண்டஸ் இந்த் வங்கி, ஐடிபிஐ வங்கி என ஏற்கெனவே இந்தியாவில் பெறு நிறுவனங்கள் தொடங்கிய வங்கிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த வங்கிகள் எதுவும் சேவையில் இருந்து வெளியேறவில்லை என காமத் தெளிவுபடுத்தி உள்ளார். ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவரான காமத், பிரிக்ஸ் வங்கியில் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .