கொரோனா அறிகுறி தென்பட்டால் குடும்பத்தோடு முகாமுக்கு மாற்றப்படுவர்! – சென்னை மாநககராட்சி அறிவிப்பால் மக்கள் பீதி

 

கொரோனா அறிகுறி தென்பட்டால் குடும்பத்தோடு முகாமுக்கு மாற்றப்படுவர்! – சென்னை மாநககராட்சி அறிவிப்பால் மக்கள் பீதி

கொரோனா அறிகுறி தென்பட்டால் நோயாளி மட்டுமின்றி, குடும்பத்தினர் அனைவரும் முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று நிருபர்களிடம் கூறுகையில், ”
கொரோனா பாதிப்பு உள்ளவர்கள், கொரோனா தொற்று ஏற்படலாம் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து செய்யப்படுகிறது. வீட்டில் ஒருவருக்கு கொரோனா இருந்தால் வீட்டில் உள்ள அனைவருமே முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுவர். கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் 10 அல்லது 15 நாட்கள் முகாமில் தங்கவைத்து வீட்டிற்கு அனுப்பப்படுவர்.

கொரோனா அறிகுறி தென்பட்டால் குடும்பத்தோடு முகாமுக்கு மாற்றப்படுவர்! – சென்னை மாநககராட்சி அறிவிப்பால் மக்கள் பீதிவீடுகளிலேயே தனிமைப்படுத்தி வைக்கப்பட்டவர்களில் 15 சதவிகிதம் பேர் கட்டுப்பாடுகளை மதிப்பதில்லை. அரசிடம் தேவையான படுக்கை வசதிகள் உள்ளதால், இனி அவர்கள் அங்கே தங்கவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து, பணிக்குத் திரும்புபவர்களை பணியமர்த்த மறுப்பதும், உடல் தகுதி சான்றிதழ் கேட்பதும் சட்டப்படி தவறு. அப்படி சான்றிதழ் கேட்பதாக, பணி அமர்த்த மறுப்பதாக முறையாக புகார் வந்தால், அந்த நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
ஏற்கனவே சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள கொரோனா பாதிக்கப்பட்டோர் தங்கும் முகாம்களில் அடிப்படை வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. உணவு, தண்ணீர், மருந்து எதுவும் சரியாக வழங்கப்படுவது இல்லை. முதலில் அந்த இடங்களில் சமூக விலகலை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கைவிடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா பாதிப்பு உறுதியானால் குடும்பத்தினர் அனைவரும் முகாம்களில் அடைக்கப்படுவார்கள் என்று மாநகராட்சி அறிவித்திருப்பது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.