இக்ரா நிகர லாபம் ரூ.17 கோடியாக குறைந்தது..

 

இக்ரா நிகர லாபம் ரூ.17 கோடியாக குறைந்தது..

தர நிர்ணய நிறுவனமான இக்ரா கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது.

2020 ஜூன் காலாண்டின் இக்ரா நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.17.04 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 17 சதவீதம் குறைவாகும். 2019 ஜூன் காலாண்டில் அந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.20.53 கோடி ஈட்டியிருந்தது.

இக்ரா நிகர லாபம் ரூ.17 கோடியாக குறைந்தது..
இக்ரா நிறுவனம்

2020 ஜூன் காலாண்டில் இக்ரா நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.80.79 கோடி ஈட்டியுள்ளது. 2019 ஜூன் காலாண்டில் இக்ரா நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.88.69 கோடியாக உயர்ந்து இருந்தது. பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில் இந்த தகவல்களை இக்ரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இக்ரா நிகர லாபம் ரூ.17 கோடியாக குறைந்தது..
ஜி.டி.பி.

சில பகுதிகளில் பகுதியளவு லாக்டவுன் அமலில் இருந்ததால் இரண்டாவது காலாண்டில் பொருளாதாரத்தில் எதிர்பார்த்ததை விட குறைவான வளர்ச்சியுடன், மொத்த உள்நாட்டு உற்பத்தி மேலும் 9.5 சதவீதமாக வீழ்ச்சி காணும் என ஏஜென்சியின் மதிப்பீடு செய்துள்ளது. இருப்பினும் கோவிட்-19ன் உண்மையான தாக்கம் எதிர்பாராத சூழ்நிலைகளின் காரணமாக மதிப்பிடப்பட்டதிலிருந்து வேறுபடலாம் என இக்ரா தெரிவித்துள்ளது.