‘குறைந்த செலவில் கொரோனாவை கண்டறியும்’.. டாடா குழுமத்தின் CRISPR பரிசோதனைக்கு அனுமதி!

‘குறைந்த செலவில் கொரோனாவை கண்டறியும்’.. டாடா குழுமத்தின் CRISPR பரிசோதனைக்கு அனுமதி!

டாடா குழுமம் டெல்லியில் இருக்கும் நிறுவனத்துடன் இணைந்து கண்டுபிடித்துள்ள கொரோனா பரிசோதனை முறைக்கு ஐசிஎம்ஆர் அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகிக் கொண்டே இருப்பதால் அதிகளவில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. வழக்கமாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு RT-PCR, ரேபிட் டெஸ்ட், ஆன்ட்டிபாடி டெஸ்ட் என பல்வேறு வகையான சோதனைகள் செய்யப்படுகின்றன. ஆனால், ரேபிட் கிட் பரிசோதனையில் துல்லியமான ரிசல்ட் கிடைக்கப்பெறவில்லை என புகார் எழுந்து வருகிறது. அதே போல, துல்லிமான ரிசல்ட்டை கொடுக்கும் RT-PCR டெஸ்ட்க்கு அதிக செலவாகும் என்பதால், அதனை நடைமுறைப்படுத்தவும் முடியவில்லை.

‘குறைந்த செலவில் கொரோனாவை கண்டறியும்’.. டாடா குழுமத்தின் CRISPR பரிசோதனைக்கு அனுமதி!

இதனால் குறைந்த செலவில் துல்லியமான முடிவை வழங்கும் கருவியை கண்டுபிடிக்க ஆராய்ச்சி நிறுவனங்கள் முயன்று வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவில் டாடா குழுமம் கண்டுபிடித்துள்ள CRISPR கோவிட்-19 பரிசோதனை முறைக்கு ஐசிஎம்ஆர் அனுமதி அளித்துள்ளது. CRISPR என்ற இந்த முறையை, டாடா குழுமமும் டெல்லியில் இருக்கும் CSIR-IGIB நிறுவனமும் இணைந்து உருவாகியுள்ளது.

‘குறைந்த செலவில் கொரோனாவை கண்டறியும்’.. டாடா குழுமத்தின் CRISPR பரிசோதனைக்கு அனுமதி!

இதன் மூலம், கொரோனா வைரஸின் மேற்புறத்தில் இருக்கும் Cas9 protein என்பதை துல்லியமாக கண்டறிந்து கொரோனா பாதிப்பை உறுதி படுத்த முடியும் என்றும் RT-PCR பரிசோதனையை விட குறைவான செலவே ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த முறையை பயன்படுத்தி வருங்காலத்தில் வேறொரு வைரஸ் பரவினாலும் கண்டறிய இயலும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.