ஐ.சி.ஐ.சி.ஐ. செக்யூரிட்டீஸ் லாபம் ரூ.329 கோடி.. இறுதி டிவிடெண்டு ரூ.13.5 அறிவிப்பு

ஐ.சி.ஐ.சி.ஐ. செக்யூரிட்டீஸ் லாபம் ரூ.329 கோடி.. இறுதி டிவிடெண்டு ரூ.13.5 அறிவிப்பு

ஐ.சி.ஐ.சி.ஐ. செக்யூரிட்டீஸ் நிறுவனம் 2021 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.329 கோடி ஈட்டியுள்ளது.

ஐ.சி.ஐ.சி.ஐ. செக்யூரிட்டீஸ் நிறுவனம் தனது கடந்த மார்ச் காலாண்டு (ஜனவரி-மாா்ச்) காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ. செக்யூரிட்டீஸ் நிறுவனம் 2021 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.329 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 111 சதவீதம் அதிகமாகும்.

ஐ.சி.ஐ.சி.ஐ. செக்யூரிட்டீஸ் லாபம் ரூ.329 கோடி.. இறுதி டிவிடெண்டு ரூ.13.5 அறிவிப்பு
ஐ.சி.ஐ.சி.ஐ. செக்யூரிட்டீஸ்

ஐ.சி.ஐ.சி.ஐ. செக்யூரிட்டீஸ் நிறுவனம் 2021 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் வருவாயாக ரூ.739 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 53 சதவீதம் அதிகமாகும். மும்பை பங்குச் சந்தையில் நேற்று ஐ.சி.ஐ.சி.ஐ. செக்யூரிட்டீஸ் நிறுவன பங்கின் விலை முந்தைய நாள் விலை காட்டிலும் 6.87 சதவீதம் அதிகரித்து ரூ.453.30ஆக உயர்ந்துள்ளது.

ஐ.சி.ஐ.சி.ஐ. செக்யூரிட்டீஸ் லாபம் ரூ.329 கோடி.. இறுதி டிவிடெண்டு ரூ.13.5 அறிவிப்பு
ஐ.சி.ஐ.சி.ஐ. செக்யூரிட்டீஸ்

ஐ.சி.ஐ.சி.ஐ. செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, 2020-21ம் நிதியாண்டுக்கு தனது பங்குதாரார்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.13.5 இறுதி டிவிடெண்டாக அறிவித்துள்ளது. இதனையடுத்து அந்த நிதியாண்டில் அந்நிறுவனம் பங்கு ஒன்றுக்கு வழங்கி மொத்த டிவிடெண்ட் ரூ.21.5ஆக உள்ளது.