ஐசிசி ஆல் டைம் பேட்டிங்: சச்சின் இல்லை… ஆனால், இவர் இருக்கிறார்?

ஐசிசி ஆல் டைம் பேட்டிங்: சச்சின் இல்லை… ஆனால், இவர் இருக்கிறார்?

சமீபத்தில் ஐசிசி ஆல் டைம் பேட்டிங் (ஒருநாள் போட்டி) வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. முதல் 10 இடத்தில் இந்திய வீரர் ஒருவர் மட்டுமே இடம் பெற்றிருக்கிறார்.

முதல் இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிரடி மன்னனாக வலம் வந்த விவியன் ரிச்சர்ட்ஸ் இடம்பெற்றுள்ளார். 1974 முதல் 1991 வரை அந்த அணிக்காக ஆடினார். இவர் 935 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

ஐசிசி ஆல் டைம் பேட்டிங்: சச்சின் இல்லை… ஆனால், இவர் இருக்கிறார்?

இரண்டாம் இடத்தில் இடத்தில் பாகிஸ்தானின் ஷாகீர் அப்பாஸ் 931 புள்ளிகளையும், ஆஸ்திரேலியாவின் கிரேக் செப்பல் மூன்றாம் இடத்தில் 921 புள்ளிகளைப் பெற்று இடம்பிடித்துள்ளனர்.

இந்தப் பட்டியலில் இருக்கும் ஒரே இந்திய வீரர் விராட் கோலி மட்டும்தான். 911 புள்ளிகள் பெற்று ஆறாம் இடத்தில் உள்ளார். தற்போது ஆடிவரும் வீரர்களில் இவரே உள்ளார் என்பது சிறப்புமிக்கது.

ஐசிசி ஆல் டைம் பேட்டிங்: சச்சின் இல்லை… ஆனால், இவர் இருக்கிறார்?

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி. இவர் 70 சதங்கள் அடித்துள்ளார். விராட் கோலி 86 டெஸ்ட் போட்டிகளில் 27 சதங்களும் 248 ஒருநாள் போட்டிகளில் 43 சதங்களையும் விளாசியுள்ளார்.

இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் டீன் ஜோன்ஸ், பாகிஸ்தானின் ஜாவித் மியாண்டட், வெஸ்ட் இண்டீஸின் பிரெய்ன் லாரா உள்ளிட்ட வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

ஐசிசி ஆல் டைம் பேட்டிங்: சச்சின் இல்லை… ஆனால், இவர் இருக்கிறார்?

இந்தியாவின் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இந்தப் பட்டியலில் இல்லாதது அவரின் ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை அளித்துள்ளது.