“அவங்க அப்படி பண்ணிருக்க கூடாது… எனக்கு மனசு கஷ்டமாயிடுச்சி” – மௌனம் கலைத்த அமைச்சர் எல்.முருகன்!

“அவங்க அப்படி பண்ணிருக்க கூடாது… எனக்கு மனசு கஷ்டமாயிடுச்சி” – மௌனம் கலைத்த அமைச்சர் எல்.முருகன்!

அண்மையில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில் தமிழ்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக பிரதமர் மோடியால் நியமிக்கப்பட்டார். அவருக்கு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தைக் கவனித்துக்கொள்ளும் இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. கூடுதலாக மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளம் ஆகிய துறைகளுக்கும் இணை அமைச்சராகியுள்ளார்.

“அவங்க அப்படி பண்ணிருக்க கூடாது… எனக்கு மனசு கஷ்டமாயிடுச்சி” – மௌனம் கலைத்த அமைச்சர் எல்.முருகன்!

இதனிடையே நீண்ட நாட்களுக்குப் பின் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த 19ஆம் தேதி கூடியது. கூட்டத்தொடரின் முதல் நாளில் புதிய அமைச்சர்களை பிரதமர் மோடி அறிமுகம் செய்துவைக்கப் போவதாகக் கூறினார். அப்போது பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதைக் கண்டித்து பேசிய பிரதமர் மோடி, “பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள், பெண்கள், விவசாயிகளின் மகன்கள், தலித்கள் என இந்த நாட்டின் மிகச் சாதாரண மக்கள் இன்று அமைச்சர்களாக உள்ளனர்.

“அவங்க அப்படி பண்ணிருக்க கூடாது… எனக்கு மனசு கஷ்டமாயிடுச்சி” – மௌனம் கலைத்த அமைச்சர் எல்.முருகன்!

ஆனால் இதனை சிலரால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. இதனால் தான் புதிய அமைச்சர்கள் அறிமுக நிகழ்ச்சியில் கூட அவர்கள் இடையூறு செய்கின்றனர்’’ என்றார். தற்போது இதுதொடர்பாக அமைச்சர் எல்.முருகன் மௌனம் கலைத்துள்ளார். இதுதொடர்பாக அவர், “நான் உணர்வுப்பூர்வமாக மிகப்பெரும் வேதனை அடைந்தேன். மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மற்றும் மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சக வரலாற்றிலேயே முதன்முறையாக அருந்ததியினர் சமூகத்திலிருந்து நான் மத்திய அமைச்சராகப் பதவியேற்றுள்ளேன்.

“அவங்க அப்படி பண்ணிருக்க கூடாது… எனக்கு மனசு கஷ்டமாயிடுச்சி” – மௌனம் கலைத்த அமைச்சர் எல்.முருகன்!

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியால் நான் அறிமுகம் செய்து வைக்கப்படும் வாய்ப்பை இழந்துவிட்டது எனக்கு வேதனையாக இருக்கிறது நாட்டில் உள்ள பட்டியலினப் பிரிவினர், பழங்குடியினர், ஓபிசி, பெண்கள் ஆகியோருக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டு அவர்கள் அமைச்சர்களாகப் பொறுப்பேற்று அவையில் அறிமுகம் செய்யப்படுவது அவர்களுக்கு முக்கியமான நாள். அன்றைய தினத்தில் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் இடையூறு செய்தது வேதனைக்குரியது” என்றார்.