“சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை” : காங்கிரஸ் தலைமையின் திடீர் அறிவிப்பு!

“சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை” : காங்கிரஸ் தலைமையின் திடீர் அறிவிப்பு!

திமுக – காங். இடையேயான 2 சுற்று பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றுள்ளது என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

“சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை” : காங்கிரஸ் தலைமையின் திடீர் அறிவிப்பு!

சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக , முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருப்பினும் தொகுதி பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இதை தொடர்ந்து மீண்டும் 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கும் என தெரிகிறது. அத்துடன் தொடர்ந்து நாளையோ நாளை மறுநாளோ பேச்சுவார்த்தை தொடரும் என அவர் தெரிவித்தார். திமுக உடனான தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் அவசர செயற்குழு நாளை கூடுகிறது.

“சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை” : காங்கிரஸ் தலைமையின் திடீர் அறிவிப்பு!

இந்நிலையில் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, “திமுக-காங்கிரஸ் 15 ஆண்டுக்கால கொள்கை அடிப்படையில் அமைந்த வலுவான கூட்டணி. பாஜகவிடம் இருந்து இந்தியாவை மட்டும் அல்ல. எதிர்க்கட்சிகளையும் காப்பாற்ற வேண்டும்:
திமுக – காங். இடையேயான 2 சுற்று பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றுள்ளது. திமுகவுடன் 2-வது கட்ட பேச்சுவார்த்தை முடிவடையும் நிலையில் உள்ளது. காங்கிரஸுக்கான தொகுதிகளை திமுக தான் முடிவு செய்யும்; பேரம் நடக்கவில்லை. சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை” என்றார்.