பாஜகவில் இணைகிறேன் : திமுகவிலிருந்து நீக்கப்பட்ட வி.பி.துரைசாமி பரபரப்பு பேட்டி!

2006 இல் துணை சபாநாயகர் ஆக்கி அழகுபார்த்தார் கருணாநிதி என்றும் அவர் பிரபல செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார்

திமுகவில் 1989-1991 மற்றும் 2006-2011 வரை துணை சபாநாயகராக பதவி வகித்தவர் வி.பி.துரைசாமி. மாநிலங்களவை எம்பியாக இருந்த இவர் தற்போது திமுக கட்சியின் துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்தார். மாநிலங்களவை சீட் தராததால் கட்சி தலைமையுடன் இருந்த கருத்துவேறுபாடு, தனது சொந்த ஊர்காரரும் தமிழக பாஜக தலைவருமான எல். முருகனுடன் கமலாலயத்தில் சந்திப்பு, திமுக தலைமைக்கு எதிராகப் பேட்டி என பல விவாகரங்களால் வி.பி.துரைசாமியின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதில் அந்தியூர் செல்வராஜ் திமுக துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் திமுக துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட வி.பி.துரைசாமி இன்று பாஜகவில் இணையவுள்ளதாக அறிவித்துள்ளார். கருணாநிதி அழைத்தார் என்பதால் 2001 ஆம் ஆண்டு மீண்டும் திமுகவிற்கு வந்தேன் என்றும் திமுகவில் சேர்ந்த என்னை 2006 இல் துணை சபாநாயகர் ஆக்கி அழகுபார்த்தார் கருணாநிதி என்றும் அவர் பிரபல செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.

மேலும் அதில், “இன்று காலை பாஜகவில் இணைகிறேன். திமுகவின் அடிமட்ட தொண்டன் பொறுப்பில் இருந்து என்னை நீக்குமாறு தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளேன்” என்றும் அவர் கூறியுள்ளார். வி.பி.துரைசாமியின் இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Most Popular

காங்கிரசின் இந்துத்துவா ஆதரவு நிலைப்பாட்டை ராகுல், பிரியங்கா காந்தி பின்பற்றுகிறார்கள்.. பினராயி விஜயன்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜைக்கு காங்கிரசின் முக்கிய தலைவர்களான ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் வாழ்த்து தெரிவித்தது எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை என செய்தியாளர்களின் சந்திப்பின் போது கேரள...

ராமர் கோயில் பூமி பூஜை.. மக்களின் மத உணர்வுகளை வெளிப்படையாக சுரண்டுவது.. சீதாராம் யெச்சூரி ஆவேசம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி ராமர் கோயில் பூமி பூஜை விழாவை கடுமையாக தாக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில், இந்த பூமி பூஜை விழா...

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் தந்தைவழி உறவுகளால் நன்மைகள் வந்து சேரும்!

இன்றைய ராசிபலன்கள் 7.08. 2020 (வெள்ளிக்கிழமை) நல்ல நேரம் காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை ராகு காலம் 10.30 மணி முதல் 12 வரையில் எமகண்டம்...

சீன அத்துமீறலை ஒப்புக்கொண்ட பாதுகாப்பு துறை அமைச்சகம்.. பிரதமர் மோடி ஏன் பொய் சொல்கிறார்?.. ராகுல் தாக்கு

கடந்த மே மாதம் சீன ராணுவம் இந்திய எல்லையில் ஊடுருவ முயற்சி செய்தது. இதன் உச்ச கட்டமாக கடந்த ஜூன் 15ம் தேதியன்று கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு...