நான் காங்கிரஸ் உறுப்பினர்தான்… பா.ஜ.க-வில் சேரவில்லை! – சச்சின் பைலட் பேட்டி

 

நான் காங்கிரஸ் உறுப்பினர்தான்… பா.ஜ.க-வில் சேரவில்லை! – சச்சின் பைலட் பேட்டி

நான் காங்கிரஸ் உறுப்பினர்தான், பாரதிய ஜனதா கட்சியில் இணையவில்லை, எதிர்கால திட்டம் குறித்து விரைவில் முடிவு செய்வேன் என்று ராஜஸ்தான் மாநில முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

நான் காங்கிரஸ் உறுப்பினர்தான்… பா.ஜ.க-வில் சேரவில்லை! – சச்சின் பைலட் பேட்டிராஜஸ்தானில் காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க பாரதிய ஜனதா முயற்சி செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மத்தியப் பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியாவை இழுத்தது போல. ராஜஸ்தானில் சச்சின் பைலட்டை இழுத்துவிடத் திரைமறைவு வேலைகள் நடந்தன. ஆனால், அவரால் அதிக அளவில் எம்.எல்.ஏ-க்களை இழுக்க முடியவில்லை. துணை முதல்வர் பதவியிலிருந்தும், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார்.

இதனால் சச்சின் பைலட் பா.ஜ.க-வில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே நேரத்தில் அவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைக் கூடாது. தனியாக கட்சி ஆரம்பித்து காங்கிரஸ் கட்சிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில், “நான் பாரதிய ஜனதா கட்சியில் சேரவில்லை. பாரதிய ஜனதா கட்சியில் சேரும் திட்டமும் இல்லை என்பதை உறுதிபடுத்த விரும்புகிறேன். என்னை பா.ஜ.க-வில் சேர்க்க முயற்சிகள் நடந்தன. நான் இப்போதும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்தான். என்னுடைய எதிர்கால திட்டம் குறித்து முடிவெடுக்கவில்லை. ராஜஸ்தான் மக்களுக்கு பணியாற்றவே விரும்புகிறேன்” என்றார்.