புதிய வசதிகளுடன் ஐ20 2020 கார் – ஹூண்டாய் அறிமுகம்!

 

புதிய வசதிகளுடன் ஐ20 2020 கார் – ஹூண்டாய் அறிமுகம்!

பல புதிய வசதிகளுடன் ஐ20 2020 என்ற புதிய காரை ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

ஏற்கனவே ஹூண்டாய் நிறுவனத்தின் முந்தைய ஐ20 எலைட் கார், சந்தையில் பிரபலமாக விளங்கி வரும் நிலையில், இந்த புதிய ஐ20 காரை ஹூண்டாய் அறிமுகப்படுத்தி உள்ளது. புதிய காரின் வெளிப்புற அமைப்பில் சில மாற்றங்களை செய்துள்ள ஹூண்டாய் நிறுவனம், அதன் நீளம் மற்றும் அகலத்தை சற்றே அதிகப்படுத்தி உள்ளது.

புதிய வசதிகளுடன் ஐ20 2020 கார் – ஹூண்டாய் அறிமுகம்!

அதேப்போல பாதுகாப்பு அம்சங்களான ஏர்பேக், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், மலைப்பாங்கான பகுதிகளில் அசிஸ்ட் கண்ட்ரோல், பார்கிங் செய்வதற்கு வசதியாக காரின் பின்புறத்தில் கேமராவும் அதற்கு சென்சார் டிஸ்பிளேவும் அமைக்கப்பட்டுள்ளது.

புதிய வசதிகளுடன் ஐ20 2020 கார் – ஹூண்டாய் அறிமுகம்!

இந்த புதிய ஐ20 கார், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய இரண்டு வகை இன்ஜினுடன் அறிமுகமாகி உள்ளது. மேலும் 8 இன்ச் தொடுதிரை, போஸ் சவுண்ட் சிஸ்டம், ஏர் பியூரிபையர் கூலிங் பேட் உடன் கூடிய வயர்லெஸ் சார்ஜர் என எண்ணற்ற வசதிகளை காரின் உள்புறத்தில் ஏற்படுத்தி இந்த புத்தம் புதிய ஐ20 2020 காரை ஹூண்டாய் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் விலை 6.79 லட்சத்தில் தொடங்குகிறது.

  • எஸ். முத்துக்குமார்