ஹைதராபாத் vs பெங்களூர்! – யாருக்கு வேண்டும் கட்டாய வெற்றி!

 

ஹைதராபாத் vs பெங்களூர்! – யாருக்கு வேண்டும் கட்டாய வெற்றி!

ஐபிஎல் திருவிழாவில் நேற்றைய போட்டியில் அசத்தலான வெற்றியை ருசித்தது ராஜஸ்தான். இன்றைய போட்டி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர்.

பெங்களூர் டீம் ஏற்கெனவே 12 போட்டிகளில் ஆடி, 7-ல் வென்று பாயிண்ட் டேபிளில் இரண்டாம் இடத்தில்  உள்ளது.  ஹைதராபாத் டீம், 12-ல் ஆடி 5-ல் மட்டுமே வென்று 7-ம் இடத்தில் உள்ளது. இப்போது பார்த்தால், ஹைதராபாத் டீம் வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதுபோல தோன்றலாம். உண்மைதான்.

ஹைதராபாத் vs பெங்களூர்! – யாருக்கு வேண்டும் கட்டாய வெற்றி!

ஆனால், இதுவரை பிளே ஆஃப் சுற்றுக்குத் தேர்வானது மும்பை மட்டுமே. பெங்களூருக்கும் கத்தி மேல் நிற்கும் நிலைதான்.  ஏனெனில், இன்று, அடுத்த போட்டியும் பெங்களூர் தோற்றுவிட்டால் 14 புள்ளிகளோடு தேங்கிவிடும். அதுவும் இரண்டாம் போட்டி வலுவான டெல்லி அணியோடு.

ஒருவேளை இரண்டு போட்டிகளிலும் பெங்களூர் தோற்றுவிட, டெல்லி ஏதேனும் ஒன்றில் வென்றால் கூட எளிதாக பிளே ஆஃப்க்கு முன்னேறி விடும். அதேபோல, 12 புள்ளிகளோடு இருக்கும் பஞ்சாப் அடுத்த போட்டியில் சென்னையை வென்றுவிட்டால் 14 புள்ளிகளோடு பெங்களூரோடு மல்லுக்கட்டும்.

ஹைதராபாத் vs பெங்களூர்! – யாருக்கு வேண்டும் கட்டாய வெற்றி!

பஞ்சாப் மட்டுமல்ல, இன்னும் ராஜஸ்தான் vs கொல்கத்தாவில் யார் வென்றாலும் 14 புள்ளிகள் பெற்றுவிடுவார்கள். 14 புள்ளிகளோடு நான்கு டீம்கள் மோதும்படி சூழல் மாறிவிடும். அதனால், பிளே ஆஃப்க்கு பாதுகாப்பாக முன்னேற இன்றைய வெற்றி பெங்களூருக்கே அதிகத் தேவை இருக்கிறது.

ஹைதராபாத் vs பெங்களூர் முதல் போட்டியில் முதலில் ஆடிய பெங்களூர் 163 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தாலும், 153 ரன்களுக்குள் ஹைதராபாத்தை வென்றது. அந்த வெற்றி இன்றும் தொடருமா… என்பது இன்னும் சில மணி நேரத்தில் தெரிந்துவிடும்.