ராஜஸ்தானுக்கு வெற்றி இலக்கு 159 #RRvsSRH

 

ராஜஸ்தானுக்கு வெற்றி இலக்கு 159 #RRvsSRH

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஐபிஎல் திருவிழாவில் இரண்டு போட்டிகள். முதல்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் Vs ராஜஸ்தான் ராயல்ஸ்.

ஹைதராபாத் அணி 6 போட்டிகளில் ஆடி நான்கில் வென்றாலும் நெட் ரன்ரேட் அடிப்படையில் ஐந்தாம் இடத்தில் உள்ளது. இதே அளவு வெற்றிபெற்ற மும்பை இரண்டாம் இடத்தில் உள்ளது.

ராஜஸ்தானுக்கு வெற்றி இலக்கு 159 #RRvsSRH

ராஜஸ்தான் ராயல் அணி இதுவரை ஆறு போட்டிகளில் ஆடி, இரண்டில் மட்டுமே வென்றிருக்கிறது. இதுவும் நெட்ரன் ரேட் அடிப்படையில் 7-ம் இடத்தில் உள்ளது. இதே அளவு இரண்டு வெற்றிபெற்ற சென்னை அணி ரன்ரேட் வித்தியாசத்தில் 6-ம் இடத்தில் உள்ளது.

டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் வார்னர் முதலில் பேட்டிங் ஆட் முடிவெடுத்தார். அவருடன் பேர்ஸ்டோ ஓப்பனிங் இறங்கினார்.

ராஜஸ்தானுக்கு வெற்றி இலக்கு 159 #RRvsSRH

வார்னர் 48 ரன்களும், பேர்ஸ்டோ 16 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். மனிஷ் பாண்டே சிறப்பாக ஆடி ஐம்பது ரன்களைக் கடந்தார்.  அடுத்து 4 ரன்கள் எடுத்ததும் உன்கட் பந்தில் ஆட்டமிழந்தார்.

20 ஓவர் முடிவில் சன்ரைசர் ஹைதராபாத் அணி 158 ரன்கள் எடுத்தது. 159 என்பதை ராஜஸ்தான் அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.