இந்தியர்களை பல ரூபத்தில் சுரண்டும் சீனா- ஆன்லைன் கேம் மூலம் ஆயிரம் கோடி ஆட்டைய போட்ட சீன நிறுவனம் -அதிரடி ரெய்டில் சிக்கினார்கள்

 

இந்தியர்களை பல ரூபத்தில் சுரண்டும் சீனா- ஆன்லைன் கேம் மூலம் ஆயிரம் கோடி ஆட்டைய போட்ட சீன நிறுவனம் -அதிரடி ரெய்டில் சிக்கினார்கள்

இன்று ஆன்லைன் கேம் விளையாடி பல இளைஞர்கள் பலியாவது மட்டுமல்லாமல் பல குடும்பங்கள் தெருவுக்கும் வந்துள்ளன .இந்த ஆன்லைன் கேமிங் மற்றும் மோசடி குறித்து ஹைதராபாத் காவல்துறையின் மத்திய குற்ற பிரிவிற்கு (சிசிஎஸ்) பல புகார்கள் வந்தன.இதனால் அவர்களை பிடிக்க போலீஸ் திட்டமிட்டது .

இந்தியர்களை பல ரூபத்தில் சுரண்டும் சீனா- ஆன்லைன் கேம் மூலம் ஆயிரம் கோடி ஆட்டைய போட்ட சீன நிறுவனம் -அதிரடி ரெய்டில் சிக்கினார்கள்
இதனால் ஹைதராபாத்சைபர் க்ரைம் போலீசார் வியாழக்கிழமை அங்குள்ள ஆன்லைன் கேம் நடத்தும் நிறுவனத்தில் அதிரடி ரெய்டு நடத்தினார்கள் .அந்த ரெய்டில் ஒரு சீன நாட்டவர் தவிர, குருகிராம், ஹரியானா மற்றும் டெல்லி ஆகிய மூன்று இந்தியர்களையும் போலீசார் கைது செய்தனர்.அப்போது அவர்கள் நிறுவனத்தோடு ,லிங்க்யூன், டோக்கிபே மற்றும் ஸ்பாட் பே உள்ளிட்ட பல நிறுவனங்களின் வங்கி கணக்குகள் இணைக்கப்பட்டுள்ளன என்பதும் தெரியவந்தது.
மேலும் இவர்கள் மக்களிடமிருந்து 1100 கோடி ரூபாய்க்கு மேல் இந்த கேம் மூலம் சம்பாதித்துள்ளதை போலீசார் கண்டறிந்தனர் .மேலும் இவர்கள் இந்த கேம் தவிர, டேட்டிங் சைட் மற்றும் சில சட்டவிரோதமான ஆப் மூலம் மக்களை ஏமாற்றியது தெரிய வந்துள்ளது .அது மட்டுமல்லாமல் இவர்களின் நிறுவனம் இந்திய அமலாக்க பிரிவிலிருந்து தப்பிக்க சீனாவிலிருந்து இந்த நிறுவனத்தை இயக்கியுள்ளார்கள்
இதனால் ஆன்லைன் கேம் நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசியாவிற்கான செயல்பாட்டுத் தலைவர் சீனாவை சேர்ந்த யா ஹாவ்,மற்றும் இயக்குநர்கள் தீரஜ் சர்க்கார், அங்கித் கபூர் மற்றும் நீரஜ் துலி.ஆகியோரை போலீசார் கைது செய்து ,அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர் .இந்தியர்களை பல ரூபத்தில் சுரண்டும் சீனா- ஆன்லைன் கேம் மூலம் ஆயிரம் கோடி ஆட்டைய போட்ட சீன நிறுவனம் -அதிரடி ரெய்டில் சிக்கினார்கள்