“அய்யய்யோ அடுத்த ரவுண்டு ஆரம்பிச்சிடுச்சா? ” -ஒரு முறை கொரானா வந்தவர்கள் இரண்டாவது முறையாக பாதித்துக்கொண்டிருக்கிறார்கள்-அதிர்ச்சி தகவல்

“அய்யய்யோ  அடுத்த ரவுண்டு ஆரம்பிச்சிடுச்சா? ” -ஒரு முறை கொரானா வந்தவர்கள்  இரண்டாவது முறையாக பாதித்துக்கொண்டிருக்கிறார்கள்-அதிர்ச்சி தகவல்

தெலுங்கானாவில் ஒரு முறை கொரானாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையளித்து குணமானவர்களுக்கு மீண்டும் மூன்று மாதங்களுக்கு பிறகு வைரஸ் தொற்று ஏற்பட்ட இரண்டு பேருக்கு அங்குள்ள மருத்து வமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது .

“அய்யய்யோ  அடுத்த ரவுண்டு ஆரம்பிச்சிடுச்சா? ” -ஒரு முறை கொரானா வந்தவர்கள்  இரண்டாவது முறையாக பாதித்துக்கொண்டிருக்கிறார்கள்-அதிர்ச்சி தகவல்

இரண்டாவது முறையாக வைரஸ் தொற்றுக்கு சமீபத்தில் ஒரு நர்ஸ் பாதிக்கப்பட்டார் .அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சையளித்து வருகிறார்கள் என்றும் ,நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இப்படி பாதிப்பு ஏற்படும் என்றும் தெலுங்கானா சுகாதார துறை அமைச்சர் ஈதல ராஜேந்தர் கூறினார் .
மேலும் இந்த வைரஸ் புதியது என்பதால் இதன் குணம், பரவும் விதம்பற்றி இப்போதுதான் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருப்பதாகவும் , இதைப்பற்றி முழுதாக எதுவும் தெரியில்லையென்றும் ,தெலுங்கானா கிராமபகுதியில் வைரஸ் தொற்று ஓரளவுக்கு கட்டுக்குள் வந்திருப்பதாகவம் அவர் கூறினார் .
இது பற்றி சுகாதார துறை செயலாளர் டாக்டர் ஸ்ரீனிவாஸ் கூறுகையில் ,ஹைதராபாத் நகரில் இரண்டாவது முறை தொற்றுக்கு ஆளானவர்களின் மாதிரிகளை எடுத்து ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளதாகவும் ,இப்போது ஓரளவு கட்டுப்படுத்துள்ளதாகவும் ,இந்த நோய்க்கு முதல் மருந்து தைரியம்தான் என்று கூறினார் .