ஹைதராபாத்தில் புற்றுநோய் மருத்துவமனையில் பெரும் தீ விபத்து -புற்று நோயாளிகள் அலறி அடித்து ஓட்டம்..

 

ஹைதராபாத்தில் புற்றுநோய் மருத்துவமனையில் பெரும் தீ விபத்து -புற்று நோயாளிகள் அலறி அடித்து ஓட்டம்..

இன்று (புதன்கிழமை)காலை தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நம்பள்ளியில் உள்ள ஒரு புற்றுநோய் மருத்துவமனையின் இரத்த வங்கியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. உடனே அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்கள் தீயணைப்பு படையினருக்கும் போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர் .தகவல் தெரிந்து அந்த இடத்திற்கு போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்தனர் . தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்த இரண்டு தீயணைப்பு அணிளுடன் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர் .

ஹைதராபாத்தில் புற்றுநோய் மருத்துவமனையில் பெரும் தீ விபத்து -புற்று நோயாளிகள் அலறி அடித்து ஓட்டம்..இந்த தீவிபத்து மின்சார ஷார்ட் சர்க்யூட் காரணமாக நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. இந்த தீவிபத்து காரணமாக அந்த பகுதி பெரிய பரபரப்புக்குள்ளானது . இந்த தீ விபத்தால் மருத்துவமனையிலிருந்த புற்று நோயாளிகளும் ,மருத்துவமனை ஊழியர்களும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர் .விரைவாக ‘தீ’யணைக்கப்பட்டதால் புற்று நோயாளிகள் நிம்மதியடைந்தனர் .
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .இதே பகுதியில் ஜூன் 23ம் தேதி அங்குள்ள ஒரு பாத்திர கடையில் இதுபோல் தீவிபத்து நடந்துள்ளதால், போலீசார் அடிக்கடி இந்த பகுதியில் நடைபெறும் தீவிபத்து பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .