நிவர் புயல் – பாம்பன் துறைமுகத்தில் 3ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்

நிவர் புயல் – பாம்பன் துறைமுகத்தில் 3ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்

ராமநாதபுரம்

வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதை அடுத்து, ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்தில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

நிவர் புயல் – பாம்பன் துறைமுகத்தில் 3ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த 24 மணிநேரத்தில் நிவர் புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
இதனிடையே, காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பாம்பன் வடக்கு கடல் பகுதியில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது.

நிவர் புயல் – பாம்பன் துறைமுகத்தில் 3ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்

இதனால், அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள், தென்கடல் பகுதியில் உள்ள சின்னப் பாலம், தெற்குவாடி கடற்கரை பகுதிக்கு கொண்டுசென்று பாதுகாக்கும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.