கொரோனா வைரஸ் நெருக்கடியை சரியாக கையாளவில்லை – நேபாள அரசுக்கு எதிராக எதிர்ப்பாளர்கள் போராட்டம்

 

கொரோனா வைரஸ் நெருக்கடியை சரியாக கையாளவில்லை – நேபாள அரசுக்கு எதிராக எதிர்ப்பாளர்கள் போராட்டம்

காத்மாண்டு: கொரோனா வைரஸ் நெருக்கடி சூழலை சரியாக கையாளவில்லை என கூறி நேபாள அரசுக்கு எதிராக எதிர்ப்பாளர்கள் போராட்டம் நடத்தினர்.

கொரோனா வைரஸ் நெருக்கடி சூழலை சரியாக கையாளவில்லை என கூறி நேபாள அரசுக்கு எதிராக எதிர்ப்பாளர்கள் போராட்டம் நடத்தினர். நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து நேபாளத்தில் ஏழு வெளிநாட்டினர் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். மூன்றாவது நாளாக காத்மாண்டுவில் ஒரு இடத்தில் 1,000 பேர் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நேபாளத்தில் வெறும் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆன சமயத்தில் மார்ச் மாதத்தில் முழுமையான பொதுமுடக்கத்தை அந்நாடு விதித்தது. ஆனால் அதன் பின்னர் நேபாளத்தில் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,062-ஆக அதிகரித்துள்ளது. இதில் 16 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.