மாற்றுத்திறனாளியை கைது செய்ததால் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு!

மாற்றுத்திறனாளியை கைது செய்ததால் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு!

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் முத்துநகரைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி முருகானந்தம், தனது நிலத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தண்டபாணி என்பவரின் வேலையாள் மாடு மேய்த்தார். இதை தட்டிக் கேட்ட முருகானந்தம் மற்றும் அவரது தாயின் கழுத்தில் கயிற்றை சுற்றி நெரித்ததாகவும், முருகானந்தத்தை கீழே தள்ளி விட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. சற்று நேரத்தில் அங்கு வந்த தாராபுரம் எஸ்ஐ கார்த்திகேயன் முருகானந்தத்தை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளார்.

மாற்றுத்திறனாளியை கைது செய்ததால் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு!

தான் மாற்றுத் திறனாளி எனக் கூறிய முருகானந்தத்தை தாக்கியதுடன் ஆபாசமாக திட்டியுள்ளார். பின்னர் கோவை சிறையில் அடைக்கப்பட்ட முருகானந்தம், ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து தனக்கு நேர்ந்த மனித உரிமை மீறல்களுக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கோரி தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் தாக்கல் செய்தார். அதில், மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டப்படி கோவை சிறையில் எந்த வசதியும் செய்து தரப்படவில்லை எனக் குற்றம் சாட்டியிருந்தார்.

மாற்றுத்திறனாளியை கைது செய்ததால் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு!

இந்த புகாரை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை.ஜெயச்சந்திரன், பாதிக்கப்பட்ட முருகானந்தத்துக்கு ஒரு லட்சம் ரூபாயை இழப்பீடாக ஒரு மாதத்தில் வழங்க அரசுக்கு உத்தரவிட்டார். மேலும், மனித உரிமை மீறலில் ஈடுபட்ட உதவி ஆய்வாளருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்த மனித உரிமை ஆணையம், தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய வசதிகளை செய்து கொடுக்கவும் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.