மின் கம்பியை மிதித்து உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.9.70 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு!

மின் கம்பியை மிதித்து உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.9.70 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு!

சென்னை பாடியநல்லூர் பவானிநகர் பகுதியில் மின் கம்பி அறுந்து விழுந்ததில் அப்பகுதியைச் சேர்ந்த ராஜவேலு என்பவரின் மனைவி காவேரி மின்சாரம் தாக்கி பலியானார். 2019ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பாக பத்திரிகையில் வெளியான செய்தியின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

மின் கம்பியை மிதித்து உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.9.70 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு!

ஏற்கனவே அதே பகுதியில் மின் கம்பி அறுந்து விழுந்ததில் மாடு ஒன்று உயிரிழந்ததாகவும், இதுசம்பந்தமாக தமிழ்நாடு மின் வாரியத்துக்குப் புகார் அளித்தும், பலவீனமான மின் கம்பியை மாற்றாததால் இந்த விபத்து நேர்ந்ததாகவும் கூறி, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த குமரேசன் என்பவர் புகார் மனுவை தாக்கல் செய்தார்.

மின் கம்பியை மிதித்து உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.9.70 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு!

இந்த வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை.ஜெயச்சந்திரன், இந்த விபத்துக்கு மின் வாரிய அஜாக்கிரதையும் கவனக்குறைவுமே காரணம் எனக் கூறி, பலியான் காவேரியின் கணவர் ராஜவேலுவுக்கு 9 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை நான்கு வாரங்களில் இழப்பீடாக வழங்க அரசுக்கு உத்தரவிட்டார்.