இன்டர்நெட் இல்லையா…கூகுள் மேப்ஸை எவ்வாறு ஆஃப்லைனில் பயன்படுத்துவது?

 

இன்டர்நெட் இல்லையா…கூகுள் மேப்ஸை எவ்வாறு ஆஃப்லைனில் பயன்படுத்துவது?

எங்காவது வெளியே தொலைதூரம் சென்றிருக்கும்போது மிகவும் உதவிகரமாக கூகுள் மேப்ஸ் இருக்கிறது. ஆனால் கூகுள் மேப்ஸ் சீராக இயங்குவதற்கு நிலையான இன்டநெட் தேவைப்படுகிறது.

ஆனால் நம் நாட்டில் அடிக்கடி சிக்னல் பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால் நடுவழியில் எங்காவது மாட்டிக் கொண்டால் கூகுள் மேப்ஸ் கூட பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது.

இதுபோன்ற சூழல்களில் கூகிள் வழங்கும் ஆஃப்லைன் மேப்ஸ் அம்சத்தைப் பயன்படுத்தலாம். எந்தவொரு பகுதியின் மேப்பையும் டவுன்லோடு செய்ய இந்த அம்சம் உதவுகிறது. இதன்மூலம் இன்டர்நெட் இணைப்பு இல்லாமலே கூகுள் மேப்ஸ் பயன்படுத்த முடிகிறது.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் பயனர்கள் கூகுள் மேப்பை ஆஃப்லைனில் டவுன்லோடு செய்வது எப்படி என இங்கே பார்க்கலாம்!

இன்டர்நெட் இல்லையா…கூகுள் மேப்ஸை எவ்வாறு ஆஃப்லைனில் பயன்படுத்துவது?

ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான வழிமுறை:

  • ஆண்ட்ராய்டு சாதனத்தில் கூகுள் மேப்ஸ் ஆப்பை திறந்து கொள்ள வேண்டும்.
  • இன்டர்நெட் இணைப்பு இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். கூகுள் ஜிமெயில் மூலம் கூகுள் மேப்ஸ் லாகின் செய்து கொள்ள வேண்டும்.
  • உங்களுக்கு தேவையான பகுதியை தேட வேண்டும்.
  • கூகுள் மேப்ஸ் செயலியின் அடிப்பகுதியில் குறிப்பிட்ட பகுதியின் பெயர் அல்லது முகவரியை க்ளிக் செய்து டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும். ரெஸ்டாரன்ட் போன்ற இடங்களை நீங்கள் தேடினால் More என்ற பகுதியை திறந்து ஆஃப்லைன் மேப்பை டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும்.

ஐ.ஓ.எஸ் அல்லது ஐபேட் சாதனங்களுக்கான வழிமுறை:

  • ஐ.ஓ.எஸ் அல்லது ஐபேட் சாதனத்தில் கூகுள் மேப்ஸ் ஆப்பை திறந்து கொள்ள வேண்டும்.
  • இன்டர்நெட் இணைப்பு இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். கூகுள் ஜிமெயில் மூலம் கூகுள் மேப்ஸ் லாகின் செய்து கொள்ள வேண்டும்.
  • உங்களுக்கு தேவையான பகுதியை தேட வேண்டும்.
  • கூகுள் மேப்ஸ் செயலியின் அடிப்பகுதியில் குறிப்பிட்ட பகுதியின் பெயர் அல்லது முகவரியை க்ளிக் செய்து டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும்.
  • ரெஸ்டாரன்ட் போன்ற இடங்களை நீங்கள் தேடினால் More என்ற பகுதியை திறந்து ஆஃப்லைன் மேப்பை டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு ஒரு இடத்தின் மேப்பை டவுன்லோடு செய்த பிறகு, இன்டர்நெட் இணைப்பு மெதுவாக அல்லது முற்றிலும் செயல்படாவிட்டால், அந்த இடத்திற்கு செல்ல வழிகாட்டுதல்களை வழங்க கூகுள் மேப்ஸ் ஆஃப்லைன் மேப்பை பயன்படுத்தும்.