“விவசாயிகளை எப்படி கலவரம் செய்யவைப்பது?” – பாஜகவின் முகத்திரை கிழிந்தது!

 

“விவசாயிகளை எப்படி கலவரம் செய்யவைப்பது?” – பாஜகவின் முகத்திரை கிழிந்தது!

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து மூன்று மாதங்களுக்கும் மேலாக டெல்லியின் எல்லைகளில் விவசாயிகள் போராடிவருகின்றனர். 11 கட்ட பேச்சுவார்த்தையிலும் சுமுகமான முடிவு எட்டப்படாததால் போராட்ட வடிவங்களை மாற்றிக்கொண்டே இருக்கின்றனர். அந்த வகையில் குடியரசு தினத்தன்று மாபெரும் டிராக்டர் பேரணியை நடத்த திட்டமிட்டிருந்தார்கள். அவர்கள் திட்டமிட்டபடி நடைபெற்ற பேரணி சில மணி நேரங்களுக்குப் பின் வன்முறையாக மடைமாற்றப்பட்டது. வன்முறைக்குப் பின்னால் இருக்கும் தீப் சித்து என்பவார் பாஜகவின் கையாள் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

“விவசாயிகளை எப்படி கலவரம் செய்யவைப்பது?” – பாஜகவின் முகத்திரை கிழிந்தது!

அதேபோல வன்முறையைக் காரணம் காட்டி எல்லைகளிலிருந்து விவசாயிகளை அப்புறப்படுத்தும் நோக்கில் உள்ளூர் மக்களைத் தூண்டிவிடும் வேலையையும் அரசு செய்ததாகக் கூறப்பட்டது. பாஜகவின் துணை அமைப்புகளைச் சேர்ந்த குண்டர்கள் விவசாயிகளைத் தாக்குவதாக்வும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. விவசாயிகளின் போராட்டத்தைக் கலைக்க வெவ்வேறு வழிகளில் பாஜக பின்னணியில் செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையெல்லாம் பாஜக தரப்பில் மறுத்துவந்தாலும் அவர்களின் பேச்சே அவர்களைக் காட்டிக் கொடுத்து விடுகிறது.

“விவசாயிகளை எப்படி கலவரம் செய்யவைப்பது?” – பாஜகவின் முகத்திரை கிழிந்தது!

அந்த வகையில் தற்போது சர்ச்சை வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த வீடியோவில் போராடும் விவசாயிகளை எப்படி தவறான வழியில் வழிநடத்துவது குறித்து பாஜக தலைவர்கள் ஐடியா கேட்கின்றனர். சில நாட்களுக்கு முன் ஹரியானா மாநில பாஜக சார்பில் குருக்ரம் பகுதியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அம்மாநில பாஜக தலைவர் ஓ.பி. தங்கர், விளையாட்டுத் துறை அமைச்சர் சந்தீப் சிங் உள்ளிட்ட பல முக்கிய பாஜக நிர்வாகிகள் கலந்துகொண்டர்.

இந்தக் கூட்டத்தில் பாஜக நிர்வாகிகள் பேசும் அந்த சர்ச்சை வீடியோவைத் தான் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜ்வாலா வெளியிட்டுள்ளார். அதில், “போராட்டம் நடத்தும் விவசாயிகள் இச்சமயம் நாம் கூறுவதைக் காது கொடுத்து கேட்கும் மனநிலையில் இல்லை. அவர்கள் தவறாக வழிநடத்தப்பட வேண்டும். அதற்கு சில ஐடியாக்கள் கொடுங்கள்” என அவர்கள் பேசியுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள சுர்ஜ்வாலா, விவசாயிகளை முட்டாளாக்குவது குறித்து ஐடியா கேட்கிறார்கள்; இதுதான் பாஜகவின் உண்மையான முகம் என்று விமர்சித்திருக்கிறார்.