தினமும் உண்ணும் உணவை முழு ஆரோக்கியமாக மாற்றுவது எப்படி?

 

தினமும் உண்ணும் உணவை முழு ஆரோக்கியமாக மாற்றுவது எப்படி?

சாப்பிட அமரும் போது மனம் அமைதியாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டும்.கோபமோ அல்லது மன உளைச்சலோ இருக்கக் கூடாது.கண்களை மூடியபடி சில வினாடிகள் இறைவனுக்கு நன்றி சொல்லிவிட்டு சாப்பிடலாம்.
தனியாக சாப்பிடாமல், குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிடுவது மகிழ்ச்சி தரும். தாய் மார்கள் உணவை சிறு உருண்டைகளாக உருட்டித் தரலாம். சாப்பாட்டில் ருசிகரம் பெருகும். சாப்பிடும் போது நன்றாக வாயினுள் அரைத்துச் சாப்பிட வேண்டும். அவசரம் கூடாது. பாதி செரிமானம் வாயிலேயே நடக்க வேண்டும் என்பர்.

தினமும் உண்ணும் உணவை முழு ஆரோக்கியமாக மாற்றுவது எப்படி?

சாப்பிடும்போது அதிகம் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். பொதுவாக ஒருவர் ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீரை உணவு உண்பதற்கு அரை மணி நேரம் முன்பாகவோ அல்லது சாப்பிட்டபின் ஒரு மணி நேரம் கழித்தோ குடிக்கலாம். காரணம், நமது இரைப்பையில் உணவு சேர்ந்தவுடன் ஹைட்ரோ குளோரிக் அமிலமும் மற்ற என்சைம்களும் சுரந்து செரிமான வேலைகளுக்கு உதவுகிறது. இந்த சமயத்தில் தண்ணீர் அதிகமாக குடிக்கும் போது, அமிலங்களின் அடர்த்தி குறைகிறது.இதனால் செரிமானம் ஆக நேரம் அதிகமாகிறது.

தினமும் உண்ணும் உணவை முழு ஆரோக்கியமாக மாற்றுவது எப்படி?

சாப்பிடும் போது முக்கால் வயிற்றுச் சாப்பாடு தான் உடலுக்கு நல்லது. சாதம் குறைவாகவும், காய்கறிகளை அதிகமாகவும் சாப்பிடுவது நல்லது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை உண்ண வேண்டாம். காய்கறிகள் தவிர கீரைவகைகள், பழங்கள் உடலுக்கு நல்லது.இயற்கை வழி உணவே உடலுக்கு ஆரோக்கியம் தரும்.

தினமும் உண்ணும் உணவை முழு ஆரோக்கியமாக மாற்றுவது எப்படி?

– இர.போஸ்