நச்சுக்களை வெளியேற்றும் டீடாக்ஸ் செய்வது ஏன் அவசியம் தெரியுமா?

 

நச்சுக்களை வெளியேற்றும் டீடாக்ஸ் செய்வது ஏன் அவசியம் தெரியுமா?

மாதத்துக்கு, வாரத்துக்கு ஒரு நாள் விரதம் இருந்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற மூலிகைகளை எடுத்துக்கொள்வது நம் முன்னோர்களின் வழக்கமாக இருந்தது. தற்போது இதற்கு எல்லாம் நமக்கு நேரம் இல்லை. ஆரோக்கியமான உணவுக்கும் வழியில்லை. கண்டதையும் சாப்பிட்டு, குடித்து, நேரம் கெட்ட நேரத்தில் தூங்கி எழுந்து, உடல் உழைப்பைக் குறைத்து உடலில் நச்சுக்களை தேக்கி வைத்திருக்கிறோம்.

நச்சுக்களை வெளியேற்றும் டீடாக்ஸ் செய்வது ஏன் அவசியம் தெரியுமா?

இப்படி உடலில் சேர்ந்துகொண்டே இருக்கும் நச்சுக்கள் பல்வேறு உடல் நலக் குறைபாட்டை ஏற்படுத்தி விடுகின்றன. சரும பிரச்னை, செரிமானக் குறைபாடு, கண்களில் வீக்கம், சீரற்ற மாதவிலக்கு, சோர்வு, மன அழுத்தம், மனநிலையில் மாற்றம், தூக்கமின்மை, தலைவலி, உடல் பருமன் என்று பல்வேறு பிரச்னைகள் நச்சுக்களால் ஏற்படுகிறது.

தினசரி வழக்கத்தை விட சற்று அதிக அளவில் தண்ணீர் அருந்தினால் கூட நச்சுக்கள் வெளியேற்றம் அதிகரிக்கும். உணவில் சர்க்கரையைக் குறைப்பது, அதிக தண்ணீர் அருந்துவது, மது – புகைப் பழக்கத்தை விடுவது, ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வது, க்ரீன் டீ, க்ரீன் காபி, செம்பருத்தி டீ போன்ற மூலிகை பானங்களை எடுத்துக்கொள்வது. உடற்பயிற்சி செய்வது, யோகா – தியானம் செய்வது, சரியான நேரத்துக்கு தூங்கி எழுவது போன்றவை நம்முடைய உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும்.

குறிப்பாக சில காய்கறி, பழங்களை எடுத்துக்கொள்வது நச்சுக்களை வெளியேற்றத் துணை புரியும் என்று ஊட்டச்சத்து, இயற்கை முறை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

தண்ணீரில் வெள்ளரிக்காயை நறுக்கிப் போட்டு அதனுடன் சிறிது எலுமிச்சை, துளசி அல்லது புதினா இலை சேர்த்து அருந்தி வந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். வயிறு உப்புசம், வாயுத் தொல்லை போன்ற பிரச்னைகள் நீங்கும். மேலும் உடலுக்குத் தேவையான வைட்டமின் சி உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் கிடைத்துவிடும்.

எலுமிச்சை டீடாக்ஸ் டிரிங்க்ஸ் எடுப்பது உடலில் பிஎச் சமநிலையைப் பராமரிக்க உதவும். தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் நச்சுக்கள் வெளியேறும்.

தொடர்ந்து டீடாக்ஸ் செய்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், சருமம் பொலிவு பெறும், மனநிலை ஆரோக்கியமாக இருக்கும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், பல்வேறு தொற்றா நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறையும், உடல் எடை குறையும், ஒட்டுமொத்த ஆரோக்கியம் அதிகரிக்கும்.