ஸ்டாலினை தோற்கடிப்பது எப்படி? கராத்தே தியாகராஜன் சொல்லும் ஐடியா!

 

ஸ்டாலினை தோற்கடிப்பது எப்படி? கராத்தே தியாகராஜன் சொல்லும் ஐடியா!

தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது, அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 20தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மயிலாப்பூர், காரைக்குடி, சேப்பாக்கம் ,வேளச்சேரி ,காஞ்சிபுரம், திருத்தணி, பழனி, சிதம்பரம், கோவை தெற்கு, ராசிபுரம் ,திருவாரூர், திருவண்ணாமலை, வேலூர் ,தூத்துக்குடி ,நெல்லை, இராஜபாளையம் ,சென்னை துறைமுகம் உள்ளிட்ட தொகுதிகளில் பாஜக களமிறங்கப் போவதாக உத்தேச பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஸ்டாலினை தோற்கடிப்பது எப்படி? கராத்தே தியாகராஜன் சொல்லும் ஐடியா!

இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள பாஜக தேர்தல் அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த கராத்தே தியாகராஜன், “குமரியில் போட்டியிடும் பொன். ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக உள்துறை அமைச்சர் அமித் ஷா வீடுவீடாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டார் . இதிலிருந்து பாஜகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 25 தொகுதிகளில் படுதோல்வி அடையும். துணை முதல்வர், மேயராக இருந்த ஸ்டாலின் எந்த திட்டத்தையும் அப்போது நிறைவேற்றவில்லை. ஆனால் தற்போது செயல் திட்டம் என்ற பெயரில் 10 ஆண்டுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்” என்றார்.

ஸ்டாலினை தோற்கடிப்பது எப்படி? கராத்தே தியாகராஜன் சொல்லும் ஐடியா!

தொடர்ந்து பேசிய அவர், “கொளத்தூர் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டால் ஒரு சாதாரண தொண்டனை நிற்கவைத்து கூட ஸ்டாலினை தோற்கடிக்கலாம். அடுத்த முதல்வர் ஸ்டாலின் என்பதற்கு வாய்ப்பே இல்லை . தமிழகத்தில் மீண்டும் எடப்பாடிபழனிசாமி ஆட்சிதான் அமையும்” என்றார்.