இதெல்லாம் இருக்கா ?அப்ப இதயநோய் உங்க வீட்டு வாசலிலேயே இருக்கும்.

 

இதெல்லாம் இருக்கா ?அப்ப இதயநோய் உங்க வீட்டு வாசலிலேயே இருக்கும்.

 இன்று உலகிலேயே அதிகமாக இதய நோயால்அதிகம்  பாதிக்கப்படுவது இந்தியர்கள்தான் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.இதற்கு நம் உணவுப்பழக்க வழக்கம் மற்றும் பல காரணங்களை கூறலாம்

இதெல்லாம் இருக்கா ?அப்ப இதயநோய் உங்க வீட்டு வாசலிலேயே இருக்கும்.

நெஞ்சுவலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனை செல்ல வேண்டும் என்ற மனப்பான்மை மக்களிடையே ஏற்பட்டால், மாரடைப்பு மற்றும் அதனால் ஏற்படும் மரணங்களை குறைக்க முடியும்.

இதயநோய் வருமுன் தவிர்க்க என்ன செய்யலாம்

நவீன வாழ்க்கை முறையில் குறைந்த வயதினரும் இதய நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் கடுமையான மன உளைச்சல், கண்டறியப்படாத ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால், உடற்பயிற்சியின்மை, மரபு ரீதியிலான குடும்ப வழி இதய நோய் போன்ற காரணங்களால் மாரடைப்பு ஏற்படுகிறது. வயது வித்தியாசம் இன்றி அனைவரும் இதய பரிசோதனை செய்து கொண்டால் பல மரணங்களை தவிர்க்கலாம். நெஞ்சுவலி ஏற்பட்டால் உடனடியாக இதய பரிசோதனையும், இதய மருத்துவரின் ஆலோசனையையும் பெற வேண்டும் .

 நவீன மருத்துவத்தின் மூலம்  திடீர் மரணத்தை பெருமளவு குறைக்கலாம். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் மாரடைப்பு நோயாளிகள் இங்கு 360 நிமிடங்கள் தாமதமாக மருத்துவமனையை சென்றடைகிறார்கள் என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. நெஞ்சுவலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனை செல்ல வேண்டும் என்ற மனப்பான்மை மக்களிடையே ஏற்பட்டால் மாரடைப்பு மற்றும் அதனால் ஏற்படும் மரணங்களை குறைக்க முடியும். வருடத்திற்கு இருமுறை முழு உடல் பரிசோதனை செய்து கொண்டால் இதய நோய் வருமுன் தவிர்க்கலாம்.