’இலங்கையில் கொரோனா தடுப்பூசி எத்தனை பேருக்கு?’ சுகாதார அமைச்சர் தகவல்

 

’இலங்கையில் கொரோனா தடுப்பூசி எத்தனை பேருக்கு?’ சுகாதார அமைச்சர் தகவல்

கொரோனா உலகம் முழுவதுமே பெரும் அச்சத்தை விளைவித்து வருகிறது. நாள்தோறும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 6 கோடியே 35 லட்சத்து 89 ஆயிரத்து 725 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 4 கோடியே 39 லட்சத்து 84 ஆயிரத்து 723 நபர்கள்.

’இலங்கையில் கொரோனா தடுப்பூசி எத்தனை பேருக்கு?’ சுகாதார அமைச்சர் தகவல்

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 14 லட்சத்து 73 ஆயிரத்து 926 பேர்.  இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 1,81,31,076 பேர்.

இலங்கையைப் பொறுத்தவரை கொரோனா தொற்றை ஓரளவு கட்டுக்குள் வைத்திருக்கும் நாடாகவே மதிப்பிடப்படுகிறது. கொரோனாவின் தொடக்கம் தென்பட்ட உடனே, லாக்டெளன், தனிமைப்படுத்தல், விமான நிலையம் மூடல் என பரபரப்பாக இருந்து கொரோனாவைக் கட்டுப்படுத்தியது.

’இலங்கையில் கொரோனா தடுப்பூசி எத்தனை பேருக்கு?’ சுகாதார அமைச்சர் தகவல்

தற்போதைய நிலையில் இலங்கையில் கொரோனா பாதிப்பு 23,987 பேர். இவர்களில் 118 பேர் மரணம் அடைந்துள்ளனர். 17500 பேர் சிகிச்சையில் நலம் மீண்டு பெற்றுவிட்டனர். இந்நிலையில் இலங்கை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, ‘கொரோனா தடுப்பூசி எப்போது நடைமுறைக்கு  வரும் என்பது தெரியாது என்றாலும் இலங்கையில் 4.2 மில்லியன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்கும்’ என்று கூறியிருக்கிறார்.