சசிகலாவுக்கு இயல்பிலிருந்து ஆக்ஸிஜன் அளவு எவ்வளவு குறைந்தது?

 

சசிகலாவுக்கு இயல்பிலிருந்து ஆக்ஸிஜன் அளவு எவ்வளவு குறைந்தது?

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஜெயலலிதா மற்றும் சசிகலா உள்ளிட்ட 4 பேர் மீது சொத்து குவிப்பு வழக்கு நடைபெற்றது. அதில் ஜெயலலிதா மரணம் அடைந்ததும் மற்ற மூவருக்கும் தண்டனை வழங்கப்பட்டது. அந்தத் தண்டனை வரும் ஜனவரி மாதம் 27ஆம் தேதி முடிவடைகிறது.

சசிகலாவுக்கு இயல்பிலிருந்து ஆக்ஸிஜன் அளவு எவ்வளவு குறைந்தது?

ஜனவரி மாதம் 27ஆம் தேதி சிறையில் இருந்து சசிகலா வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று திடீரென்று சசிகலாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. வழக்கமாக தினந்தோறும் அவருக்கு நடக்கும் பரிசோதனைகளில் அவரின் உடல்நிலையில் வெப்பநிலை அதிகமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் உடனே அவர் சிறையில் இருந்து வெளியே அழைத்து வரப்பட்டு சிவாஜி நகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மூச்சுத் திணறலும் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இயல்பாக ஒருவருக்கு ஆக்சிஜன் லெவல் என்பது 95 முதல் 100 சதவீதம் வரை இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுவார்கள். 90 – 94 எனும் அளவுக்கு ஆக்ஸிஜன் குறைந்தால் மிதமான பாதிப்பு என்றும், அதைவிட இன்னும் குறைந்தால் மோசமான பாதிப்பு என்று வரையறை செய்கிறார்கள்.

சசிகலாவுக்கு இயல்பிலிருந்து ஆக்ஸிஜன் அளவு எவ்வளவு குறைந்தது?

நேற்று சசிகலாவுக்கு இருந்த ஆக்சிஜன் லெவல் 79 என்று செய்திகள் சொல்கின்றன. இதனால் அவருக்கு மூச்சுத்திணறல் கடுமையாக ஏற்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. இதிலிருந்து மீண்டு இயல்புக்குத் திரும்பி விட்டதால், சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டதாகவும், அதன் பின் நள்ளிரவில் மீண்டும் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார் என்று அரசு தரப்பில் சொல்லப்படுகின்றன.

சசிகலாவின் உறவினர்கள் சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இன்னும் நவீன சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஊடகங்கள் மூலமாக தெரிவித்து வருகின்றனர். இப்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் அரசு மருத்துவமனையில் பெரிய அளவிற்கான நவீன மருத்துவ உபகரணங்கள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்து வருகின்றனர்.