Home இந்தியா மனிதகுலத்துக்கு கொரோனாவிலிருந்து எப்போது விடிவுகாலம் பிறக்கும்? - ஆராய்ச்சியாளர் கூறும் விளக்கம் இதோ!

மனிதகுலத்துக்கு கொரோனாவிலிருந்து எப்போது விடிவுகாலம் பிறக்கும்? – ஆராய்ச்சியாளர் கூறும் விளக்கம் இதோ!

கொரோனா இரண்டாம் அலை பரவல் இந்தியாவையே நிலைகுலைய வைத்துள்ளது. முந்தைய அலையை விட அதிவேகமாகப் பரவி வருவதால் வீட்டுக்குள்ளேயே மாஸ்க் அணிவது கட்டாயமாகியுள்ளது. முதல் அலையில் நகர்ப்புறங்களை மட்டும் தாக்கிய கொரோனா தற்போது கிராமப்புறங்களை நோக்கி நகர்ந்திருப்பது அச்சமடைய வைக்கிறது.
தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சம் வரை சென்றது. ஆனால் இப்போது 3 லட்சத்துக்கும் கீழே குறைந்துள்ளது.

மனிதகுலத்துக்கு கொரோனாவிலிருந்து எப்போது விடிவுகாலம் பிறக்கும்? - ஆராய்ச்சியாளர் கூறும் விளக்கம் இதோ!
India coronavirus deaths: Mystery surrounds death toll as India surpasses 1  million cases - The Washington Post

இப்படி குறைவதால் ஆறுதல் பட எதுவுமில்லை என்று கூறும் ஆராய்ச்சியாளர்கள் பெரும்பாலான மாநிலங்களில் பரிசோதனை அதிகப்படுத்தவில்லை என்பதால் குறைவான பாதிப்பு எண்ணிக்கை வருவதாகக் கூறுகிறார்கள். தொற்று குறைவதைச் சாதகமாகப் பயன்படுத்தி கொரோனா தடுப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை வருவதை யாராலும் தடுக்க முடியாது என்கின்றனர்.

Coronavirus in India: Over 3.49 lakh Covid-19 cases, 2,767 deaths in new  record high - Coronavirus Outbreak News

மனிதகுலத்தை ஆட்டிப்படைக்கும் கொரோனாவிலிருந்து எப்போது விடிவுகாலம் பிறக்கும் என்ற ஏக்கம் மக்களிடையே எழுந்திருக்கிறது. அதற்கு உலக சுகாதார அமைப்பின் தலைமை அறிவியலாளர் சௌம்யா சுவாமிநாதன் பதிலளித்துள்ளார். தனியார் ஊடக நிறுவனத்துக்குப் பேட்டியளித்த அவர், “இப்போது நாம் கடினமான காலகட்டத்தில் இருக்கிறோம். வைரஸ் எவ்வளவு காலம்இன்னும் இருக்கப் போகிறது என்பதைக் கணிப்பது கடினமான ஒன்றாகும். உலக மக்கள் தொகையில் 30 சதவீத மக்களுக்கு இந்த ஆண்டின் இறுதிக்குள் தடுப்பூசி போட்டுவிட்டால், நோயின் தீவிரத் தன்மையிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.

Soumya Swaminathan, daughter of MS Swaminathan, is blazing a trail as WHO's  first chief scientist

2022ஆம் ஆண்டில் 60 முதல் 80 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போட்டிருந்தால் இறப்புகள் வெகுவாகக் குறையும். மொத்த மக்கள் தொகையில் எவ்வளவு பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தால், வைரஸின் தாக்கம் குறையும் என்பது பற்றி இன்னும் துல்லியமாகக் கண்டறியப்படவில்லை. இருப்பினும் அடுத்த 6 முதல் 18 மாதங்கள் மிகவும் முக்கியமானவை. எவ்வளவு வேகமாக தடுப்பூசி செலுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே, பொருளாதார வளர்ச்சி சகஜ நிலைக்கு திரும்புவதும் அடங்கியிருக்கிறது. தடுப்பூசி பற்றாக்குறை உள்ளிட்ட தடைகள் இருந்தாலும் மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தும் வேகத்தை அதிகரிப்பது அவசியம்” என்றார்.

மனிதகுலத்துக்கு கொரோனாவிலிருந்து எப்போது விடிவுகாலம் பிறக்கும்? - ஆராய்ச்சியாளர் கூறும் விளக்கம் இதோ!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

பஞ்சாப் காங்கிரஸை வேறு யாராவது பலப்படுத்த முடியுமானால் என்னை நீக்குங்க.. சுனில் ஜாகர்

பஞ்சாப் காங்கிரஸை வேறு யாராவது பலப்படுத்த முடியுமானால் என்னை தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று நான் ஆரம்பம் முதலே சொல்லி வருகிறேன் என சுனில் ஜாகர் தெரிவித்தார்.

பீகார் பா.ஜ.க. கூட்டணிக்குள் விரிசல்?.. ஜிதன் ராம் மாஞ்சியுடன் லாலு பிரசாத் மூத்த மகன் ரகசிய சந்திப்பு

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஜிதன் ராம் மாஞ்சியை, ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ்...

கடவுளின் அவதாரம் அழைத்துக்கொள்ளும் சிவசங்கருக்கு மீண்டும் சம்மன்

கடவுளின் அவதாரம் என தன்னை அழைத்துக் கொள்ளும் சிவசங்கர் பாபா மீது எழுந்த பாலியல் குற்றச்சாட்டு குறித்த விசாரணைக்காக அவருக்கு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

காஷ்மீர் விவகாரம்.. திக்விஜய சிங் பேசிய ஆடியோவை வெளியிட்ட பா.ஜ.க… சிக்கலில் காங்கிரஸ்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீரின் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்யும் என்று அந்த கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங், பாகிஸ்தான் செய்தியாளரிடம் பேசிய ஆடியோ ஒன்றை...
- Advertisment -
TopTamilNews