சஞ்சு சாம்சனின் வெறித்தனம்… ஆர்ச்சரின் சர்பரைஸ்! – ராஜஸ்தான் வென்றது எப்படி? #CSKvsvRR

சஞ்சு சாம்சனின் வெறித்தனம்… ஆர்ச்சரின் சர்பரைஸ்! – ராஜஸ்தான் வென்றது எப்படி? #CSKvsvRR

ஐபிஎல் திருவிழாவில் ஒவ்வொரு போட்டியும் அனல் பறக்கும் யுத்தம் போல மாறிவிட்டது. பஞ்சாப் – டெல்லி போட்டியில் சூப்பர் ஓவர் சென்றது. பெங்களூரு – ஹைதரபாத் போட்டியில் கடைசி ஓவர் வரை போராட்டம் தொடர்ந்தது.

நேற்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ் இடையேயான போட்டியில் அசத்தலான வெற்றியைப் பெற்றிருக்கிறது ராஜஸ்தான்.

சஞ்சு சாம்சனின் வெறித்தனம்… ஆர்ச்சரின் சர்பரைஸ்! – ராஜஸ்தான் வென்றது எப்படி? #CSKvsvRR

போட்டிக்கு முன்பு ராஜஸ்தான் அணி மீது எவருக்குமே நம்பிக்கை இல்லை. ஏனெனில், அவர்களோடு மோதுவது மும்பை இண்டியன்ஸையே தோற்கடித்த சென்னை சூப்பர் கிங்ஸ். ஆனால், எல்லோரின் கணிப்புகளையும் தவிடு பொடியாக்கி வெற்றியை ருசித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ். எப்படி இது சாத்தியமானது?

ஷார்ஜா கிரிக்கெட் மைதானம் மற்றவற்றோடு ஒப்பிடுகையில் சற்று சிறியது. பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமான பிட்ச். அதனால், சேஸிங் சிக்கல் இருக்காது என்று நம்பியே, டாஸ் வின் பண்ணிய தோனி முதலில் பவுலிங் தேர்தெடுத்தார்.

சஞ்சு சாம்சனின் வெறித்தனம்… ஆர்ச்சரின் சர்பரைஸ்! – ராஜஸ்தான் வென்றது எப்படி? #CSKvsvRR

ஆனால், தோனியின் முடிவு தவறானது என்பதை ராஜஸ்தான் அணி காட்டிவிட்டது. ஏனெனில், பேட்டிங் பிட்சில் முதலில் ஆடும் அணியினருக்கு டார்கெட் எனும் மனநெருக்கடி ஏதும் இருக்காது. கிடைக்கும் ஒவ்வொரு ரன்னும் முக்கியம் என அடித்து ஆடுவார். அதனால், பெரிய அளவில் ஸ்கோர் எடுக்க முடியும். அடுத்து ஆடும் அணிக்கு ரன் ரேட் எனும் சுமை பெரிய அழுத்தமாக மாறிவிடும். நேற்றும் அப்படித்தான் ஆனது.

சஞ்சு சாம்சனின் வெறித்தனம்… ஆர்ச்சரின் சர்பரைஸ்! – ராஜஸ்தான் வென்றது எப்படி? #CSKvsvRR

ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மீது நேற்று மாலை வரை பலரும் அவநம்பிக்கையைத்தான் வெளிப்படுத்தினார். அவர் ஃபார்மில் இல்லை, சமீபத்திய மேட்ச்களின் சரியாக விளையாட வில்லை என்றெல்லாம் சொன்னார்கள். வழக்கமாக நான்காம் இடத்தில் இறங்கும் ஸ்டீவ் ஸ்மித் நேற்று ஓப்பனிங் இறங்கினார். இது பலருக்கு ஆச்சயம்.

சஞ்சு சாம்சனின் வெறித்தனம்… ஆர்ச்சரின் சர்பரைஸ்! – ராஜஸ்தான் வென்றது எப்படி? #CSKvsvRR

ஸ்மித்தோடு இறங்கிய ஜெய்ஸ்வால் 6 ரன்களோடு அவுட்டாக, சஞ்சு சாம்சனோடு அதிரடி காட்டத் தொடங்கினார் ஸ்மித். ஒரு பக்கம் சஞ்சு சாம்சன் சிக்ஸர்களாக விளாசித்தள்ளினார். இருவரின் பார்டனர்ஷிப்பை சிஎஸ்கே பெரும் போரட்டத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

9 சிக்ஸர், 1 ஃபோருடன் 32 பந்துகளில் 74 ரன்களைக் குவித்து அவுட்டானார் சஞ்சு சாம்சன். 4 ஃபோர், 4 சிக்ஸர்களுடன் 47 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து தம் மீதான விமர்சனத்திற்கு பதிலடி தந்தார் ஸ்மித்.

சஞ்சு சாம்சனின் வெறித்தனம்… ஆர்ச்சரின் சர்பரைஸ்! – ராஜஸ்தான் வென்றது எப்படி? #CSKvsvRR

கடைசியில் ஆர்ச்சரின் ஆட்டம்தான் அதிரடி. 8 பந்துகளை மட்டுமே சந்தித்த ஆர்ச்சர் 4 சிக்ஸர்களை விளாசி 27 எடுத்து அசர வைத்தார்.  180 -190 என்கிற கணிப்பு ஆர்ச்சரின் ஆட்டத்தால் 216 என்று முடிவானது.

சஞ்சு சாம்சனின் வெறித்தனம்… ஆர்ச்சரின் சர்பரைஸ்! – ராஜஸ்தான் வென்றது எப்படி? #CSKvsvRR

அடுத்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஓப்பனிங்கில் முரளி விஜய், ஷேன் வாட்ஸன் இருவருமே பந்துகளை வீணடிக்க வில்லை என்றாலும் ரன் ரேட்டுக்கு உதவும்படியாக இல்லை. இருவருக்குப் பிறகு அணியின் சுமையை டூ பிளஸிஸ் தன் தோளில் சுமந்தார்.

டாம் கரன் ஆறே பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள், ஒரு ஃபோரை விளாசி, 17 ரன்களோடு அவுட்டானர். ராயுடுக்குப் பதிலாகச் சேர்க்கப்பட்ட ருத்ராஜ் டக் அவுட்டானார். முதல் மேட்ச்சில் விளையாட வாய்ப்பு கிடைக்காத கேதர் ஜாதவ் 16 பந்துகளில் 22 ரன்களோடு அவுட்டானார். தோனியும் டு பிளசிஸும் ஜோடி சேர்ந்தனர். சிக்ஸர்கள் விளாசப்பட்டன. ஆனால், வெற்றிக்கு எடுக்க வேண்டிய ரன் ரேட் ரொம்ப உயரத்தில் இருந்தது.

சஞ்சு சாம்சனின் வெறித்தனம்… ஆர்ச்சரின் சர்பரைஸ்! – ராஜஸ்தான் வென்றது எப்படி? #CSKvsvRR

ஒரு கட்டத்தில் டூ பிளஸிஸூம் அவுட்டாக, கடைசி ஓவரின் 38 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை. ஆறு பந்துகளையும் சிக்ஸர்களாக அடித்தாலும் வெல்ல முடியாது. தோனி அப்போது அடித்த மூன்று சிக்ஸர்களும் அவரின் தனிப்பட்ட ரன்களை அதிகரிக்கவே உதவியது.

சஞ்சு சாம்சனின் வெறித்தனம்… ஆர்ச்சரின் சர்பரைஸ்! – ராஜஸ்தான் வென்றது எப்படி? #CSKvsvRR

பேட்டிங்கில் அசத்திய ஆர்ச்சர் பவுலிங்கிலும் மின்னினார். 4 ஓவர் வீசி, 26 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 200 மேல் ஸ்கோர் சென்ற மேட்ச்சில் இது அசாதாரணமானது. ஒரு விக்கெட்டைய அதுவும் டூ பிளஸிஸ் விக்கெட்டை வீழ்த்தினார்.

சஞ்சு சாம்சனின் வெறித்தனம்… ஆர்ச்சரின் சர்பரைஸ்! – ராஜஸ்தான் வென்றது எப்படி? #CSKvsvRR

ஒரு நிமிடமும் சோராத ராஜஸ்தான் வீரர்களின் ஆட்டமும், எந்தப் பந்தை எதிர்கொள்வதிலும் தயக்கம் காட்டாத தன்மையும் அவர்களுக்கு முதல் வெற்றியைப் பரிசளித்துள்ளது.