சசிகலாவுக்கு கொரோனா வந்தது எப்படி – சிறை நிர்வாகத்தின் அலட்சியமா?

 

சசிகலாவுக்கு கொரோனா வந்தது எப்படி – சிறை நிர்வாகத்தின் அலட்சியமா?

முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா சிறையிலிருந்து ஜனவரி மாதம் 27ஆம் தேதி விடுதலை ஆவார் என்ற செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டு கொண்டிருந்தது, அந்த நேரத்தில் திடீரென்று சசிகலாவின் உடல்நலக் குறைவு செய்தி வெளிவந்தது ஆச்சர்யத்தை அளித்தது.

நேற்று முதன்நாள் சிறையிலிருந்து சசிகலாவுக்கு வழக்கமான பரிசோதிக்க நடக்கும்போது அவரின் உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தது தெரிய வந்திருக்கிறது. அதற்கான சிகிச்சையின்போது அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட சிவாஜி சாலையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இயல்பு நிலைக்கு திரும்பிய அவருக்கு நள்ளிரவில் மீண்டும் தீவிர சிகிச்சை அளிக்கும் அளவு உடல்நிலை மாற்றமடைந்துள்ளது.

சசிகலாவுக்கு கொரோனா வந்தது எப்படி – சிறை நிர்வாகத்தின் அலட்சியமா?

நேற்று சிடி ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் சிவாஜி சாலை மருத்துவமனையில் அந்த வசதிகள் இல்லாததால் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனைக்கு சசிகலா மாற்றப்பட்டார்.

அங்குதான் அவருக்கு பரிசோதனை முடிவில் கொரோனா இருப்பது தெரியவந்திருக்கிறது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் சிறையில் சசிகலாவை யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை; பார்வையாளர்கள் கூட வீடியோ கான்பரன்சில்தான் பேசிக் கொள்கிறார்கள். இப்படி இருக்கையில் சிறைக்குள் இருந்த சசிகலாவுக்கு கொரோனா எப்படி வந்தது என்ற கேள்வியே இப்போது முன்னே நிற்கிறது.

சசிகலாவுக்கு கொரோனா வந்தது எப்படி – சிறை நிர்வாகத்தின் அலட்சியமா?

ஏனெனில் சசிகலா அங்கு இருக்கும் சாதாரண கைதிகளில் ஒருவர் அல்ல. தனி அறை கொடுக்கப்பட்டு சிறப்பு கவனம் பெறும் கைதி. இவர் மீது சிறை விதிமீறல் தொடர்பாக சில புகார்கள் இருந்ததால் தனி கவனம் சசிகலா மீது வைக்கப்பட்டிருந்தது. யாரையும் சந்திக்கவும் யாருடனும் பேசவோ எளிதில் முடியாத சூழலில்தான் சசிகலாவுக்கு சிறையில் இருந்தது. ஆனாலும் இவற்றையெல்லாம் மீறி எப்படி சசிகலாவுக்கு கொரோனா வந்தது?

சிறைத்துறை நிர்வாகம் இவ்வளவு அலட்சியத்தோடு இருக்கிறதா என்ற கேள்வியும் எல்லோருக்கும் ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒரு வாரமாக சசிகலாவுக்கு காய்ச்சல் இருந்ததாக அவரின் உறவினர்கள் மீடியாவில் சொல்லி வருகிறார்கள். அப்படி எனில் ஒரு வாரமாக சசிகலாவுக்கு ஏன் முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.

சசிகலாவுக்கு கொரோனா வந்தது எப்படி – சிறை நிர்வாகத்தின் அலட்சியமா?

கொரோனாவின் ஆரம்ப அறிகுறியை கண்டு அவர்களின் சிகிச்சை அளிக்கப்படவில்லையே ஏன் என்று கேள்வி பலரால் முன்வைக்கப்படுகிறது. சிறைத்துறை நிர்வாகம் இந்த விஷயத்தில் மிக அலட்சியமாக நடந்து கொண்டிருக்கிறது என்பது சசிகலா தரப்பு குற்றச்சாட்டு. ஏனெனில் சிறைக்குள் செல்பவர்களும் சிறை அதிகாரிகளும் சிறையில் மற்ற பணிகளில் இருப்பவர்கள் கொரொனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி இருக்கிறார்களா என்பதே இப்போது சந்தேகத்திற்குரியதாக மாறிவிட்டது.

இலங்கையில் இதுபோல ஒரு சிறையில் ஏகப்பட்ட கைதிகளுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டதால் பெரும் கலவரமே வெடித்தது. மிகுந்த பாதுகாப்புடன் இருந்த சசிகலாவுக்கு பரப்பன அக்ரஹார சிறையில் கொரோனா வந்துவிட்டது என்றால் மற்ற கைதிகளின் நிலை என்ன என்பது பெரும் அச்சம் தருவதாக மாறி வருகிறது. அந்தச் சிறையில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதன் முடிவு அறிவிக்கப்பட வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக இருக்கிறது.