விக்கல் சரியாக அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பது சரியா?

 

விக்கல் சரியாக அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பது சரியா?

சுடச்சுட இட்லி சாப்பிடும்போது, காரமாக எதையும் டிரை பண்ணும்போது தொண்டை அடைத்துக் கொள்ளும் திடீரென்று விக்கல் ஏற்படும். எப்போ வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது ஆனா வர வேண்டிய நேரத்துக்கு கரெக்டா வந்துவிடுவேன் என்பது விக்கலுக்கும் பொருந்தும்.

நம்முடைய நெஞ்சுக் கூட்டின் நெஞ்சக பகுதியையும் செரிமான மண்டலத்தையும் பிரிக்கும் மெல்லிய சவ்வு போன்ற தசை படலமான உதரவிதானம் (diaphragm) பிடிப்பு ஏற்படும்போது அது குரல் நாண்களை மூடி விக்கல் ஒலியை எழுப்புகிறது.

விக்கல் சரியாக அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பது சரியா?

விக்கல் எதனால் ஏற்படுகிறது?

பெரும்பாலான நேரங்களில் வெளிப்படையான காரணங்கள் எதுவும் இல்லை. மிக விரைவாக சாப்பிடுவது. சாப்பிடும்போது காற்றை விழுங்குவது. அதிக கொழுப்பு, காரமான உணவை சாப்பிடுவது. குளிர் பானங்கள், ஆல்கஹால் அருந்துவது உள்ளிட்டவை உதரவிதானத்தில் எரிச்சலை ஏற்படுத்தி விக்கலை உண்டாக்கிவிடுகிறது.

அதிக உணர்ச்சிப் பெருக்கில் இருப்பது, அதிகமாக காற்றை உள் இழுப்பது, சுவிங்கம் மெல்லுவது உள்ளிட்டவற்றாலும் விக்கல் ஏற்படலாம்.

எப்போதாவது விக்கல் வந்து ஒரு சில விநாடிகளில் மறைந்துவிட்டால் பிரச்னை எதுவும் இல்லை. அதுவே அடிக்கடி வந்து மணிக் கணக்கில் தொந்தரவு செய்கிறது என்றால் அது உடலில் ஏற்பட்ட பாதிப்பின் அறிகுறியாகவும் இருக்கலாம். கல்லீரல், சிறுநீரக பாதிப்புகள், இரைப்பை புண், கணைய அழற்சி போன்ற பாதிப்பு காரணமாக விக்கல் ஏற்பட்டலாம். அப்படி அடிக்கடிக்கடி விக்கல் வந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

90 சதவிகித தொடர் விக்கல் பிரச்னைக்குக் குடல் தொடர்பான பிரச்னைகளும், 10 சதவிகித தொடர் விக்கலுக்கு நரம்பு தொடர்பான பிரச்னைகளும் காரணமாக இருக்கலாம்.

உணவு சாப்பிடும் போது ஏற்படும் சாதாரண விக்கல் தண்ணீர் குடிப்பதாலேயே சரியாகிவிடும்.

மூச்சை நன்கு இழுத்து 10 முதல் 20க்குள் எண்களை மனதுக்குள்ளாக எண்ண வேண்டும். அதன் பிறகு மூச்சை வெளியிட வேண்டும். இப்படி 4-5 முறை செய்தால் விக்கல் நின்றுவிடும்.

ஒரு தம்ளர் தண்ணீரைக் குடித்தல் விக்கல் நிற்கும். கொஞ்சம் சர்க்கரையை வாயில் போட்டு சுவைத்தாலும் விக்கல் நிற்கலாம்.

பயமுறுத்தும் போது விக்கல் நிற்பதும் உண்டு. திடீர் அதிர்ச்சி காரணமாக நரம்பு மண்டலம் ஒரு சில விநாடிகளுக்கு அதிர்ச்சியடைவதால் சுவாசம், நுரையீரல் செயல்பாடு என அனைத்தும் அதிர்ச்சி காரணமாக சில விநாடிகள் நிற்கின்றன. இதனால் விக்கல் சரியாகிறது. இது சரியான வழிமுறை இல்லை.